twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவாஜி வீட்டு கோயில் கும்பாபிஷேகத்தில் ரஜினி - அஜீத்

    By Chakra
    |

    Rajini attends Vinayagan temple Kumpabishekam
    சிவாஜி வீட்டில் புதுப்பித்து கட்டப்பட்ட விநாயகர் கோவிலுக்கு நடந்த கும்பாபிஷேகத்தில் ரஜினி பங்கேற்றார்.

    செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் உள்ள சிவாஜி வீட்டுக்கு முன்னால் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது.

    இக்கோவிலை சிவாஜியும், அவரது சகோதரர்களும் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டினர்.

    தற்போது இந்த கோவிலை நடிகர் பிரபு புதுப்பித்து கட்டியுள்ளார். பக்தர்கள் சுற்றி வந்து கும்பிடுவதற்கு வசதியாக தன் வீட்டின் முன் பகுதி தோட்டத்தில் இருந்து கொஞ்சம் இடமும் ஒதுக்கியுள்ளார். கோபுரமும் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. சிவாச்சாரியார்கள் கலசத்தில் புனித நீரை எடுத்து வந்து கோபுரத்தில் தெளித்தனர். பிரபு, ராம்குமார் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் பொதுமக்களும் திரண்டு வந்து வழிபட்டனர்.

    கும்பாபிஷேகத்தில் நடிகர்கள் ரஜினி பங்கேற்றார். அஜீத், மனோரமா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    சிவாஜி மன்ற தலைவர் கே.வி.பி.பூமிநாதன், மக்கள் தொடர்பாளர் டைமண்ட்பாபு, சிவாஜி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X