ரஜினியை விடுங்க.. ரஜினிபேபியின் அட்வைஸைப் பார்த்தீங்களா.. வைரலாய்ருச்சேங்க!
சென்னை : ரஜினி பேபியின் கொரோனா அட்வைஸ் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று அதிகமாகி வரும் நிலையில் . பல நாடுகள் போர்க்கால அடிபடையில் செயல்பட்டு வருகின்றன . இந்தியாவில் இந்த கொரோனா தொற்று அதி வேகமாக பரவி வரும் நிலையில் . இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து வருகிறது. முக்கியமாக பல முன்னணி பிரபலங்களை தங்களின் சார்பாக வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர் .

முக்கியமாக முன்னணி நடிகர்களான ரஜினி , கமல், சூர்யா மற்றும் தனுஷ் போன்றவர்களும் கொரோனாவிற்கு எதிரான விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு உள்ளனர். நேற்று ரஜினி பதிவேற்றிய வீடியோவில் உண்மை தன்மை இல்லை என ரஜினியின் வீடியோவை ட்விட்டர் நீக்கியது பரபரப்பாகியது .

தன்னால் முடிந்த பல விஷயங்களையும் விழிப்புணர்வுகளையும் நடிகர்கள் செய்து வரும் நிலையில் நடிகர்களுக்கு இணையாக ஒரு விழிப்புணர்வு வீடியோவை பதிவேற்றியுள்ளனர் ரஜினி ரசிகர்கள். இதில் ரஜினிபேபி தர்பார் ரஜினியை போல வேடமிட்டு மிக அழகாக கொரோனா தொற்றை பற்றியும் அதில் இருந்து நம்மை நாம் எப்படி பாதுகாத்து கொள்வது போன்ற விழிப்புணர்வையும் அழகாக குழந்தைகளே விளக்கியிருக்கிறார்கள் .

ரஜினிபேபி என்ற குழந்தை சமூக வலைத்தளத்தாள் நன்கு அறியபட்ட குழந்தை. சிறு குழந்தையாக இருந்து மிக அழகாக ரஜினி போல நடித்து அசத்தும் குழந்தை . தற்போது தனது நண்பர்களுடன் அழகான விழப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது .

நோய் எவ்வாறு பரவுகிறது கைகளை நாம் எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்ற விஷயங்களை மிக அழகாக நாடக வடிவில் கொடுத்துள்ளனர். தற்போது குழந்தைகளே முழுக்க முழுக்க இடம் பெற்ற இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரபட்டு வருகிறது .

உலக சுகாதார மையம் உலகம் முழுவதும் இந்த நோய் பரவுவதால் சமூக வலைத்தளங்களில் கொரோனா பற்றிய விழிப்புணர்வை செய்பவர்களுக்கு தனி அங்கீகாரம் கொடுத்து வருகிறது. கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு சரியாக சொல்லபட்டிருந்தால் அந்த வீடியோக்களின் கீழ் கொரோனா பற்றிய தகவல்களை நேரடியாக தெரிந்து கொள்ள லிங்கை இந்த அங்கீகரிக்கப்பட்ட வீடியோக்களின் கீழ் தெரியவைத்து இருக்கிறது. வீடியோக்களை பார்பவர்கள் இவ்வாறு லிங்கை கிளிக் செய்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம் .


Click it and Unblock the Notifications