பாட்ஷா பாதி, துப்பாக்கி மீதி.. தெறியாய் வளர்ந்து நிற்கும் ரஜினியின் ஸ்டைலிஷ் ‘தர்பார்’

By Staff

சென்னை: ரஜினிகாந்தின் சினிமா அறிவு அலாதியானது. சக நடிகர்களின் படங்களை தவறாமல் பார்த்துவிடுவார். அதேபோல் முக்கியமான இயக்குநர்களின் படங்களையும் மிஸ் பண்ணவே மாட்டார். அவர்கள் எந்த ஜானரில் ஸ்பெஷல் என்பதையும் துல்லியமாக தெரிந்து வைத்திருப்பார்.

அந்த வகையில் ரஜினிக்கு பிடித்தமான இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். (கதை திருட்டு பஞ்சாயத்துகளையும் தாண்டி ரஜினிக்கு இவரை பிடிச்சிருக்குன்னா, ஏ.ஆர்.எம்.முக்கு எங்கேயோ பெரிய மச்சமிருக்குது). ரஜினி, மிஸ் பண்ணாத ஹிரோக்களில் விஜய்யும் ஒருவர். விஜய், முருகதாஸ் காம்போவில் உருவான 'துப்பாக்கி' படம் ரஜினியின் மோஸ்ட் ஃபேவரைட் பீஸ்.

Rajini becomes more stylish in Darbar

இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது என்பது உறுதியாகி, அவரும் வந்து சூப்பர்ஸ்டாரிடம் 'தர்பார்' கதையை விளக்கி முடித்ததும், 'துப்பாக்கி மாதிரி செம்ம ஸ்டைலியா, மாஸா இருக்கணும்' என்றிருக்கிறார் ரஜினி. அசந்த முருகதாஸ் 'நிச்சயமா சார்' என்றார். அந்த புத்துணர்ச்சியுடனே படத்தின் ஷூட்டிங் துவங்கி அடுத்தடுத்த ஷெட்யூல்கள் மும்பையே அதிருமளவுக்கு நடந்து முடிந்துள்ளன.

இறுதிக் கட்ட ஷெட்யூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது ஷூட்டிங். அதன் பின் கணிசமான நாட்களை போஸ்ட் ப்ரொடக்‌ஷனுக்காக ஒதுக்கியிருக்கிறார் முருகதாஸ். இந்த நிலையில் 'தர்பார்' படத்தின் ஸ்ட்ரக்சர் பற்றி சில சிறப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

துப்பாக்கி படத்தில் விஜய்யை செம்ம ஸ்டைலிஷாக காட்டியிருப்பார் முருகதாஸ். அதேபோல்தான் இந்தப் படத்திலும் ரஜினியை போலீஸ் அதிகாரி வேடத்தில் மாஸ் ஸ்டைலியாக காட்டியுள்ளார். பேட்ட படத்தில் ரஜினியை கணிசமான வருடங்கள் பின்னோக்கிய லுக்கிற்கு அழைத்துச் சென்றிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். அந்த ஃப்ரெஸ் அண்டு ஃப்ரீக்கி லுக்கின் நீட்சியாகவே தர்பாரில் ரஜினி இருப்பார் என்கிறார்கள்.

பாட்ஷா படத்தின் உயிர்நாடியாக மும்பையில் ரஜினி மாணிக்கமாக இருந்து பாட்ஷாவாக மாறிய தெறி காட்சிகள் இருக்கும். அதேபோல் இந்தப் படத்திலும் வேற லெவல் ஃபிளாஸ்பேக் ஒன்று இருக்கிறதாம். இது படத்தின் மிக முக்கிய போர்ஷனாக இருக்குமாம். அதேபோல் துப்பாக்கி படம் போல் செம்ம கேஷுவலனா ஆக்‌ஷன் சீக்வென்ஸுகளும், படு ஸ்டைலியான தரத்தில் இருக்குமாம்.

ஆக மொத்தத்தில் இந்தப் படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஸ்டைலிஸான சினிமா ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்கிறார்கள்!

வீ ஆர் வெயிட்டிங் பாபா!.

- ப்ரியா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X