Rajini: காக்கா ராதாகிருஷ்ணனுடன் ரஜினியை கம்பேர் செய்த ப்ளூ சட்டை... சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனையா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது.

முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது.

அதில், சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி, சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ஆகியோர் பேசியது வைரலானது.

அதுகுறித்து தொடர்ச்சியாக ட்ரோல் செய்து வந்த ப்ளூ சட்டை மாறன், தற்போது பழம்பெரும் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் உடன் ரஜினியை கம்பேர் செய்து கலாய்த்துள்ளார்.

 Rajini: Blue Sattai Maran compared Rajini to Kaka Radhakrishnan

சூப்பர் ஸ்டாருக்குப் போட்டியா காக்கா ராதாகிருஷ்ணன்: ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பில் உள்ள 'ஜெயிலர்' திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, நெல்சன் காம்போ முதன்முறையாக இணைந்துள்ளது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. முன்னதாக ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்றது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இதில், ரஜினி, நெல்சன், அனிருத், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, கலாநிதி மாறன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது ரஜினி தனது சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து மனம் திறந்து பேசினார். சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு தான் ஆசைப்பட்டது இல்லை என்றும், அதேநேரம் அதனை நினைத்து பயந்தது கிடையாது எனவும் கூறினார்.

மேலும், 'காகம் - பருந்து' என குட்டி ஸ்டோரியும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த கண்டெண்ட் குறித்து ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகிறார். அதேபோல், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனும் ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டில் பற்றி பேசியிருந்தார். அதாவது ரஜினிக்கு போட்டி அவரே தான், 72 வயதிலும் அவர் தான் சூப்பர் ஸ்டார். இந்த வயதில் ரஜினியைப் போல நடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுங்கள் என இளம் நடிகர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுத்திருந்தார்.

இதுவரை ரஜினியின் பேச்சுக்கு மட்டுமே பதிலடி கொடுத்து வந்த ப்ளூ சட்டை மாறன், இப்போது கலாநிதி மாறனின் பேச்சையும் ரோஸ்ட் போட்டுள்ளார். அதாவது கலாநிதியின் கருத்தையே ரஜினியின் ரசிகர்களும் வைரலாக்கி வந்தனர். அதன்படி ரஜினி ரசிகர்களை பருந்துக் குஞ்சு என குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளார். அதாவது, "72 வயது ஆனாலும் தலைவர் இன்னும் கெத்தாக நடிக்கிறார். இந்தியாவில், ஏன் ஆசியாவிலேயே எந்த நடிகராவது இந்த வயதுவரை நடிக்க முடியுமா? - பருந்துக்குஞ்சு" என ட்வீட் செய்துள்ளார்.

மேலும், அதே ட்விட்டர் பதிவில் இதற்கு பதிலும் கொடுத்து சம்பவம் செய்துள்ளார் ப்ளூ சட்டை. "எதுக்கு அவ்வளவு தூரம் போகணும்? தமிழ்நாட்டிலயே உண்டு. தனது 86 வயதுவரை.. தமிழ் சினிமாவில் பல்வேறு வேடங்களில் அசத்திய நடிகர் ஒருவர் உண்டு. நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த பெருங்கலைஞர். சில குறிப்பிடத்தக்க படங்கள், பைத்தியக்காரன், மணமகள், மனோகரா, துளி விஷம், மங்கையர்க்கரசி, கப்பலோட்டிய தமிழன், தேவர் மகன், மே மாதம், வியட்நாம் காலனி, மனதை திருடி விட்டாய், வசூல் ராஜா MBBS. அவரது பெயர் காக்கா ராதாகிருஷ்ணன்" என குறிப்பிட்டுள்ளார்.

அதோடு காக்கா ராதாகிருஷ்ணன் நடித்த காமெடியான வீடியோ க்ளிப்ஸையும் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இதனைப் பார்த்த ரஜினியின் ரசிகர்கள், ப்ளூ சட்டை மாறனை ஆபாச வார்த்தைகளால் திட்டி கடுமையாக அர்ச்சனை செய்து வருகின்றனர். ப்ளூ சட்டை மாறனும் அதற்கு நக்கலாக பதில் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X