Rajini: ரஜினிக்கு கோயில்... கருங்கல்லில் சிலை... ”தம்பி அது மைக் மோகன்..” பங்கம் செய்த ப்ளூ சட்டை!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளார்.
இதனிடையே தலைவரின் தீவிர ரசிகர் ஒருவர், ரஜினிக்காக கோயில் கட்டி கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
மதுரையில் நடந்துள்ள இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் கோயிலில் இருக்கும் சிலை ரஜினி இல்லை, மைக் மோகன் என ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார்.

தம்பி அது மைக் மோகன்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் தொடர்ச்சியாக தலைவர் 170 படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. மும்பையில் அமிதாப் பச்சனை ரஜினி சந்தித்த போட்டோ வைரலானது.
அதனை ஓவர்டேக் செய்துள்ளார் மதுரையில் உள்ள ரஜினி ரசிகர். மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், ரஜினிக்கு கோயில் கட்டி அங்கே தலைவரின் சிலையையும் வைத்துவிட்டார். 250 கிலோ கருங்கல்லில் செய்யப்பட்டுள்ள ரஜினியின் சிலைக்கு, தினமும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வருகிறார். இந்த சிலை அருகில் தனது அம்மா, அப்பாவின் புகைப்படங்களையும், விநாயகரின் புகைப்படத்தையும் வைத்துள்ளார்.

ரஜினியின் ஆன்மிக அரசியலை நனவாக்கிய ரசிகராக கார்த்திக் மாஸ் காட்டி வருகிறார். பயபக்தியுடன் ரஜினிக்கு பூஜை செய்து வழிபடும் கார்த்தியின் வீடியோ வைரலாகி வருகிறது. இதனை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக ட்ரோல் செய்துள்ளார். சிலையை பார்த்தால் இது ரஜினி மாதிரி இல்லை, மைக் மோகன் என கலாய்த்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளதை போல, அந்த சிலையில் இருப்பது மைக் மோகனின் உருவம் தான் என நெட்டிசன்களும் ட்ரோல் செய்து வருகின்றனர். ரஜினிக்கு கோயில் கட்டி அங்கே மைக் மோகன் சிலையை வைத்துள்ளாரே எனவும் பங்கமாக கலாய்த்துள்ளனர். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவு நெட்டிசன்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











