Rajini: எங்க தாத்தா ஏன் தமன்னா கூட ஐட்டம் டான்ஸ் ஆடப் போறாரு... ரஜினியை வம்பிழுத்த ப்ளு சட்டை
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் இருதினங்களுக்கு முன்னர் வெளியானது.
அனிருத் இசையில் காவாலா என்ற டைட்டிலில் உருவான இந்தப் பாடலுக்கு தமன்னா நடனமாடியுள்ளார்.
தமன்னாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினியும் செம்ம ஸ்டைலாக டான்ஸ் ஆடியது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், தமன்னாவுடன் ரஜினியும் இணைந்து நடனமாடியதை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

ரஜினியை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகிறது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியுடன் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடல் இருதினங்களுக்கு முன்னர் வெளியானது. அனிருத் இசையில் 'காவாலா' என்ற இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ஷில்பா ராவ்வின் ஹஸ்க்கியான குரலும், தமன்னாவின் கிளாமர் ஆட்டமும் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது. அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஸ்டைலிஷாக என்ட்ரி கொடுத்து ஆட்டம் போட்டுள்ளார்.
தனது ஃபேவரைட் ஸ்டைல்களில் ஒன்றான கூலர்ஸை சுழட்டி மாட்டுவதை இப்பாடலில் செய்துள்ளார் சூப்பர் ஸ்டார். ஒட்டுமொத்தமாக காவாலா பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், இன்னொரு பக்கம் செம்மையாக ட்ரோலும் செய்யப்பட்டு வருகிறது. ரஜினிக்காக இல்லையென்றாலும் தமன்னாவிற்காக ஜெயிலர் படத்தை தியேட்டரில் சென்று பார்க்கலாம் என சூப்பர் ஸ்டார் ரசிகர்களே கமெண்ட்ஸ் செய்தனர்.
காவாலா பாடலில் தமன்னாவின் அசத்தலான ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள், அவரை ரசிப்பதற்காகவே ஜெயிலர் படத்திற்கு ஃபர்ஸ்ட் ஷோ சென்றுவிடுவார்கள் என சொல்லப்படுகிறது. அதேநேரம் சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த வயதிலும் தன் மகள் வயதுடைய நடிகையுடன் இப்படி குத்தாட்டம் ஆடலாமா என ட்ரோல் செய்தனர். ரஜினிகாந்த் தமன்னாவுடன் ஐட்டம் டான்ஸ் ஆடியதை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றே தெரிகிறது.

இந்நிலையில் ரஜினியின் வயதை வைத்தும் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் ட்ரோல் செய்யப்பட்டது. இதனை பின்னணியாக வைத்து வெளியான மீம் ஒன்று வைரலாகி வருகிறது. அதனை தனது டிவிட்டரில் ஷேர் செய்து, ப்ளூ சட்டை மாறனும் ரஜினியை வம்பிழுத்துள்ளார். அதில், "உங்க வீட்ல உள்ளவங்க யாரையாவது இப்படி வயச வச்சு கிண்டல் பண்ணுவீங்களா" என கேட்கப்படுகிறது.
அதற்கு "எங்க தாத்தா ஏன் தமன்னா கூட ஐட்டம் டான்ஸ் ஆடப் போறாரு?" என கலாய்த்து பதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ரஜினிக்கு தாத்தா வயதாகிவிட்டது எனவும், அப்படியொரு தாத்தா எங்கள் வீட்டில் இருந்தால் அவர் தமன்னாவுடன் டான்ஸ் ஆட வாய்ப்பே இல்லை என்றும் ட்ரோல் செய்யப்பட்டுள்ளது. இதனை டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறனுக்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











