என்னை தான் 2.0 ஹீரோவாக நடிக்க கேட்டாங்க, மறுத்துட்டேன்: ஆமீர் கான்
மும்பை: 2.0 படத்தில் நடிக்குமாறு ஷங்கரும், ரஜினியும் தன்னை கேட்டுக் கொண்டதாக பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் ஜனவரி மாதம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு பாலிவுட் நடிகர் ஆமீர் கானை ஷங்கர் கேட்டுள்ளார்.
இது குறித்து ஆமீர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

ஷங்கர்
நான் ஷங்கர் சார் மற்றும் ரஜினிஜியின் மிகப் பெரிய ரசிகன். 2.0 படத்தில் நடிக்குமாறு ஷங்கர் அழைத்தார். ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தில் என்னை நடிக்குமாறு கூறினார்.

அழைப்பு
தனக்கு உடல் நிலை சரியில்லாததால் 2.0 படத்தில் என்னை நடிக்க வைக்குமாறு ஷங்கரிடம் ரஜினி தெரிவித்துள்ளார். மேலும் 2.0 படத்தில் நடிக்குமாறு எனக்கு போன் செய்து கேட்டுக் கொண்டார் ரஜினி.

ஹிட்
2.0 படத்தின் ஸ்க்ரிப்ட் சூப்பர். ஆனால் படத்தை பற்றி நினைத்தாலே ரஜினி சார் தான் என் நினைவுக்கு வந்தார். என்னை அவர் கதாபாத்திரத்தில் வைத்து பார்க்க முடியவில்லை.

ரஜினி சார்
என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது. ரஜினி சாரால் மட்டுமே இந்த படத்தில் நடிக்க முடியும் என்று நான் ஷங்கரிடம் தெரிவித்துவிட்டேன். நான் எந்திரன் படத்தை பார்த்துள்ளேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

மொழிகள்
2.0 நிச்சயம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாகும் என்று தெரிந்தே அந்த படத்தில் நடிக்க மறுத்தது கடினமான முடிவு என்று ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











