Don't Miss!
- Finance
Spotify-ஐயும் விட்டு வைக்காத 'ரெசிஷன்' வைரஸ்.. 600 ஊழியர்கள் பணிநீக்கம்..!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Lifestyle
நீங்க ஹாஸ்டலில் தங்கி இருக்கீங்களா? அப்ப மறக்காம இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுமாம்... ஏன் தெரியுமா?
- News
தேர்வு நெருங்குகிறது.. ஹிஜாப் அணிய அனுமதி கொடுங்கள் - உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் மனு
- Sports
ஐசிசி-ன் உச்சகட்ட விருதுகள்.. 3 இந்திய வீரர்கள் கவுரவிப்பு.. விராட் கோலியின் மாஸ் கம்பேக் - விவரம்!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
அகில உலக சூப்பர் ஸ்டார்... ஆர்ப்பரித்த ரசிகர்கள்... ரஜினியின் அந்த சிரிப்பின் அர்த்தம் இதுதானா?
சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11ம் தேதி வெளியானது.
முன்னதாக டிசம்பர் 24ம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அப்போது விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ப்து மாதிரியாக பேசியிருந்தார் சரத்குமார்.
இது சர்ச்சையான நிலையில், தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய ரஜினியை அவரது ரசிகர்கள் அகில உலக சூப்பர் ஸ்டார் என வரவேற்ற வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
“வாரிசு“ படம் பார்த்து கண்கலங்கிய வம்சியின் தந்தை… மிகப்பெரிய சாதனையே இதுதான் நெகிழ்ந்த வம்சி!

அடுத்த சூப்பர் ஸ்டார்?
கறுப்பு வெள்ளை சினிமாவில் தொடங்கி இன்றைய நவீன உலகத்திலும் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் ரஜினிகாந்த். ரசிகர்களால் ஒரே சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுவது ரஜினி மட்டுமே. தனது தனித்துவனமான ஸ்டைல், பஞ்ச் டயலாக் என ஒவ்வொரு படங்களிலும் வெரைட்டியாக நடித்து மாஸ் காட்டி வருகிறார். தற்போது ஜெயில்ர், லால் சலாம் படங்களில் பிஸியாக இருக்கும் ரஜினி, மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகிறது.

விஜய் - அஜித் போட்டி
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார், விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், சூர்யவம்சம் படத்தின் வெற்றி விழாவிலேயே இதனை நான் கூறியிருந்தேன் என்றார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானதுடன், ரசிகர்களிடம் விவாதத்தையும் ஏற்படுத்தியது. மேலும் சினிமா பத்திரிகையாளர் பிஸ்மியும் ரஜினி காலம் முடிந்தது, இனி விஜய் தான் சூப்பர் ஸ்டார் என பேசியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரஜினி ரசிகர்கள் பிஸ்மியின் அலுவலம் சென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்த விவகாரம் பெரிதாகிகொண்டே இருக்க, இதில் அஜித் ரசிகர்களும் வம்படியாக வந்து சிக்கினர். விஜ்ய் அல்லது அஜித் இவர்களில் ஒருவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற விவாதமும் வைரலானது.

அகில உலக சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த விவாதம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்த ரஜினி விமானத்தில் சென்னை திரும்பினார். அதனையடுத்து அவரை வரவேற்க காத்திருந்த ரசிகர்கள், ரஜினிக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்தனர். அப்போது "அகில உலக சூப்பர் ஸ்டார்... ஒரே சூப்பர் ஸ்டார்... தலைவா... தலைவா..." என அவரை சூழ்ந்து கொண்டு வாழ்த்தினர். இதனை பார்த்த ரஜினி காரில் ஏறும் வரையில் ரசிகர்களை புன்னகையுடன் பார்த்தபடிச் சென்றார்.

ட்ரெண்டாகும் வீடியோ
விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற விவாதம் வைரலானதால், ரஜினி ரசிகர்கள் இப்போது நேரடியாகவே களத்தில் இறங்கியுள்ளதை பார்க்க முடிகிறது. மேலும் விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே ரஜினியை அகில உலக சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் வாழ்த்தி முழுக்கமிட்டதாகவும் சொல்லப்படுகிறது. விஜய்யின் வாரிசு ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போது, அவரை குறிவைத்து ரஜினி ரசிகர்கள் அப்படி சொன்னார்களா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.