நட்சத்திர பிறந்தநாளை கொண்டாடினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சென்னை : ரஜினியின் நட்சத்திர பிறந்தநாள் டிசம்பர் 2ந்தேதி அவரது வீட்டில் கொண்டாடபட்டது. இதில் பல தீட்சிதர்கள் கலந்து கொண்டு யாகம் வளர்த்து அதற்கான சடங்குகளை செய்தனர். இதில் ரஜினியின் மகள்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத தூண் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது ஸ்டைலை அடிச்சிக்க இதுவரை ஆளே இல்லனு சொல்லலாம். சுமார் 44ஆண்டு காலம் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக தனக்கென தனி சிம்மாசனம் அமைத்து இருக்கிறார்.

Rajini Celebrated the star birthday

ரஜினிக்கு கடவுள் பக்தி அதிகம், அடிக்கடி இமயமலை சென்று தியானம் செய்வார். அரசியலுக்கு எப்போது வருவார் என்று கேள்வி கேட்டால், அவர் எப்பவும் கூறும் பதில் 'ஆண்டவன் முடிவு செய்தால் நான் வந்து விடுவேன் ' என்பது தான்.

டிசம்பர் 12ல் அவர் பிறந்தநாள் வர உள்ள நிலையில், ரஜினியின் நட்சத்திர பிறந்தநாள் டிசம்பர் 2 அவரது வீட்டில் கொண்டாடபட்டது. இதில் பல தீட்சிதர்கள் கலந்து கொண்டு யாகம் வளர்த்து அதற்கான சடங்குகளை செய்தனர் .

இந்த நிகழ்வில் ரஜினியின் மகள்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் சிலரும் கலந்து கொண்டனர். இந்த சடங்குகள் மற்றும் பூஜைகள் சென்னையில் உள்ள அவரது வீட்டில் நடைப்பெற்றது .

இதற்கிடையே ரஜினியின் பிறந்த நாளான 12ம் தேதியை பிரமாண்டமானதாக மாற்ற அவரது ரசிகர்கள் இப்பவே ரெடியாகி வருகின்றனராம். அடுத்து அவர் அரசியலுக்கு வரப் போவதாக எதிர்பார்க்கப்படுவதால் இந்த பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடும் திட்டத்தில் ரசிகர்கள் உள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X