»   »  28 நாள் மலேசிய ஷெட்யூல் முடிந்தது... சுற்றுலா சொர்க்கம் தாய்லாந்தில் கபாலி டீம்!

28 நாள் மலேசிய ஷெட்யூல் முடிந்தது... சுற்றுலா சொர்க்கம் தாய்லாந்தில் கபாலி டீம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி பட ஷூட்டிங்குக்காக ரஜினி மலேசியா போனாலும் போனார்... அவர் போகுமிடங்களிலெல்லாம் பின்னாலேயே ஒட்டு மொத்த மலேசியாவும் ஓடிக் கொண்டிருந்தது.

சமூக வலைத் தளங்களைத் திறந்தால் எங்கும் மலேசியாவில் ரஜினி என்ற தலைப்புடன் ரசிகர்கள் பகிர்ந்த படங்கள், தகவல்கள்.


Rajini completes 28 day Malaysian schedule.. arrives Thailand

ரஜினி கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்கியதிலிருந்து, கடந்த 28 நாட்களாக அவர் படப்பிடிப்புக்காக சென்ற இடங்கள் அனைத்திலும் ரசிகர்களின் திருவிழாக் கோலம்தான்.


ஒரு வழியாக மலேசிய ரசிகர்களின் அன்புப் பிடியிலிருந்து தப்பி, இப்போது தாய்லாந்து சென்றுள்ளார் ரஜினி. இங்குள்ள மார்க்கெட் மற்றும் தெருக்களில் நடைபெறுவது போன்ற சில காட்சிகள் கபாலி படத்தில் இடம்பெறுவதால், பாங்காக் சென்றுள்ளார் ரஜினி.


பாங்காக் விமான நிலையத்தில் ரஜினியை பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.

English summary
Rajinikanth and his team has arrived Thailand capital Bangkok for Kabali shooting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil