கட்அவுட்டுக்கு ரத்த அபிஷேகம் செய்த ரசிகர்கள்...ரஜினியின் முதல் ரியாக்ஷன்
சென்னை : டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் சமீபத்தில் தான் நடித்து முடித்தார் ரஜினி. அந்த படத்தின் டப்பிங் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, அடுத்த படத்திற்காக கதை கேட்டு வருகிறார் ரஜினி. தலைவர் 169 பற்றி பல தகவல்களும் வெளியாகி வருகின்றன.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கிராமத்து தலைவர் ரோலில் ரஜினி நடித்துள்ளார். அவருடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அண்ணாத்த ஃபஸ்ட்லுக்
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10 ம் தேதி காலை அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரையும், மாலையில் படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டனர். இவை வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே ரஜினி ரசிகர்கள் அவற்றை வைரலாக்கி, டிரெண்டிங் ஆக்கினர். அண்ணாத்த ஃபஸ்ட்லுக் தேதி வெளியானதுமே ட்விட்டரில் ரஜினிகாந்த், நயன்தாரா, அண்ணாத்த, அண்ணாத்த ஃபஸ்ட்லுக் போன்ற ஹாஷ்டாக்குகளை டிரெண்டிங் ஆக்கி விட்டனர்.

மிரட்டலான மோஷன் போஸ்டர்
இமானின் மிரட்டல் இசையில் வெளியான அண்ணாத்த மோஷன் போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றது. கையில் நீண்ட அரிவாளுடன், வேஷ்டி சட்டையில் பைக்கில், கொல்கத்தா சாலையில் ரஜினி வருவது போன்றும், எதிரிகளை பந்தாடுவது போன்ற காட்சிகளுடன் மோஷன் போஸ்டர் அமைக்கப்பட்டிருந்தது. இதனை தலைவா என அனல் பறக்கும் ஹாட் எமோஜிக்களுடன் வரவேற்றனர் ரஜினி ரசிகர்கள்.

ரத்த அபிஷேகம் செய்த ரசிகர்கள்
அதே சமயம் திருச்சியில் ரஜினியின் தீவிர ரசிகர்கள் சிலர் அண்ணாத்த பட கெட்அப்பில் ரஜினிக்கு கட்டஅவுட் வைத்திருந்தனர். பொது இடத்தில் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து, ரஜினி கட்அவுட்டிற்கு ரத்த அபிஷேகம் செய்தனர். உடனடியாக இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி படு வைரலானது.

ரஜினி மீது போலீசில் புகார்
ரஜினி ரசிகர்களின் இந்த செயலுக்கு பல சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது போன்ற காட்டுமிரான்டி தனமான செயல்களை ரஜினி உடனடியாக தடுக்க வேண்டும் என பலர் வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. ஆட்டை பலி கொடுத்தவர்கள் மீது மட்டுமின்றி ரஜினி மீதும் புகார் அளிக்கப்பட்டது.

ரஜினியின் முதல் ரியாக்ஷன்
இந்நிலையில் ரசிகர்களின் இந்த செயலுக்கு முதல் முறையாக நேற்று ரஜினி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், அண்ணாத்த திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது வன்மையாக கண்டிக்கதக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென்று அன்புடன் கேட்குக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். வருங்காலத்தில் இது போன்ற செயல்களை ரசிகர்கள் யாரும் செய்ய வேண்டாம் என அதில் கேட்டுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











