உன்னை இழந்து விட்டேனே நண்பா.. அம்பரீஷ் மறைவு குறித்து ரஜினி வேதனை

Recommended Video

அம்பரீஷ் மறைவு குறித்து ரஜினி வேதனை

சென்னை: நடிகர் அம்பரீஷின் மறைவிற்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது நெருங்கிய நண்பரை இழந்து வாடுவதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக வீட்டு வசதித்துறை முன்னாள் அமைச்சரும், கன்னட நடிகருமான அம்பரீஷ் கடந்த 21-ம் தேதி இரவு மூச்சுத் திணறல்,சிறுநீரகக் கோளாறு காரணமாக பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

Rajini condolence for actor Ambrish

இந்நிலையில் சனிக்கிழமை நவம்பர் 24ம் தேதி இரவு 11 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழிந்தார். அவருக்கு அபிஷேக் என்ற மகனும், சுமலதா என்ற மனைவியும் உள்ளனர்.

அம்பரீஷின் மறைவு கன்னட திரையுலகினரையும், காங்கிரஸ் கட்சியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அம்பரீஷின் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, " ஒரு அற்புதமான மனிதர். என்னுடைய நெருங்கிய நண்பர். உங்களை நான் இன்று இழந்து விட்டேன். நிச்சயம் அதற்காக மிகவும் வருத்தப் படுகிறேன். உங்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்", என தெரிவித்துள்ளார்.

இதேபோல நடிகை ராதிகாவும் அம்பரீஷின் மறைவிற்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X