”உங்களின் சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது தான்”: பா ரஞ்சித்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: பா ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் இரஞ்சித்தை பாராட்டியுள்ளார்.

விவாதங்களை கிளப்பிய நட்சத்திரம் நகர்கிறது

விவாதங்களை கிளப்பிய நட்சத்திரம் நகர்கிறது

பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்துக்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காதலை மையப்புள்ளியாக வைத்து அதனைச் சுற்றி நடக்கும் அரசியலை, மேடை நாடகம், உரையாடல்கள் மூலம் நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் ரஞ்சித். சினிமா ரசிகர்களிடம் பல்வேறு விதமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், பா ரஞ்சித்தின் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

நட்சத்திரம் நகர்கிறது பார்த்த சூப்பர் ஸ்டார்

நட்சத்திரம் நகர்கிறது பார்த்த சூப்பர் ஸ்டார்

பா ரஞ்சித் இயக்கத்தில் கபாலி, காலா என இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடைசி பத்தாண்டுகளில் ரஜினி நடித்த படங்களில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் சிறப்பான விமர்சனங்களையும் பெற்றது கபாலியும் காலாவும் தான். இந்நிலையில், பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது தான்

சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது தான்

துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு தென்மா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் பா ரஞ்சித்துக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அதில், "உங்கள் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது தான். நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம் என அனைத்தும் மிகச்சிறப்பு. எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு, நான் மிகவும் ரசித்தேன்." எனத் தெரிவித்துள்ளார்.

எனது நாடக வாழ்க்கையை ஞாபகப்படுத்தியது

எனது நாடக வாழ்க்கையை ஞாபகப்படுத்தியது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பகாலங்களில் நாடகத்தில் நடித்து, அதன் மூலம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார். அதனை நினைவுப்படுத்தியும் ரஞ்சித்தை பாராட்டியுள்ளார். "குறிப்பாக எனது ஆரம்பகால நாடக வாழ்க்கையை ஞாபகப்படுத்தியது நட்சத்திரம் நகர்கிறது படம் தான். நாடக நடிகராக என்னால் இந்த படத்தில் எளிதாக ஒன்றிப்போக முடிந்தது, என தனது நாடககால வாழ்வின் நினைவுகளையும் சூப்பர் ஸ்டார் பகிர்ந்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ரஜினி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். ரஜினியின் பாராட்டால் நட்சத்திரம் நகர்கிறது படக்கு பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X