TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
மகளுக்கு திருமணம்.. 4 நாள் கொண்டாட்டம்.. செம குஷியில் டான்ஸ் ஆடிய ரஜினி.. வைரலாகும் வீடியோ!

சென்னை: மகள் திருமண நிகழ்ச்சியில் ரஜினி நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற இருக்கிறது. ரஜினி தனக்கு நெருங்கியவர்களுக்கு ஒருபுறம் பத்திரிகை வைத்து கொண்டிருக்க, நேற்று முன்தினமே திருமணக் கொண்டாட்டம் தொடங்கி விட்டது.

திருமண நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக நேற்று முன்தினம் ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் விருந்து நடைபெற்றது. இதில், ரஜினியுடன் நட்புடன் இருக்கும் நல்லி குப்புசாமி, கண்ணதாசன் மகன் குடும்பம், ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், உறவினர்கள் என சினிமா சாராத நபர்கள் கலந்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் ராதா கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. நாளை மிக நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற இருக்கிறது. பின்னர், எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில், மகள் திருமண விழாவில் ரஜினி தனது மனைவி லதா மற்றும் உறவினர்களுடன் நடனம் ஆடும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் முத்து படத்தில் இடம்பெற்றிருந்த 'ஒருவன், ஒருவன் முதலாளி' பாடலுக்கு அவர் நடனம் ஆடுகிறார்.
படத்தில் இடம் பெற்றிருந்த பாடலில் கூட ரஜினி அவ்வளவாக நடனம் ஆடவில்லை. பெரும்பாலும் குதிரை வண்டியில் அவர் இருப்பது போன்று தான் பெரும்பான்மையான காட்சிகள் இருக்கும். ஆனால், தற்போது இப்பாடலுக்கு ரஜினி நடனம் ஆடிய வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
மகள் திருமணம்.. செம குஷியில் டான்ஸ் ஆடிய ரஜினி.. வைரலாகும் வீடியோ! #Rajinikanth pic.twitter.com/xCMFQOcLKc
— Oneindia Tamil (@thatsTamil) February 10, 2019