தங்க செருப்பு.. 200 கோடி சொத்து.. ரஜினி டான்ஸ்?.. வரலட்சுமி திருமணத்தில் இவ்வளவு நடந்திருக்கா?
சென்னை: சரத்குமாரின் மகள் வரலட்சுமி கடந்த இரண்டாம் தேதி மும்பையை சேர்ந்த நிக்கோலாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் தாய்லாந்தில் நடந்ததாக ஒருதரப்பினரும், இந்தியாவில்தான் நடந்தது என இன்னொரு தரப்பினரும் சொல்லிவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க அவர்களது திருமணத்தில் சில விஷயங்கள் நடந்ததாக நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பத்திரிகை துறையில் வாழ்க்கையை தொடங்கிய சரத்குமார் புலன் விசாரணை படத்தின் மூலம் அடையாளப்பட்டார். அவர் அப்போது சாயா தேவி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு வரலட்சுமி பிறந்தார். ஆனால் சாயா தேவியை சில காரணங்களால் பிரிந்துவிட்ட சரத்குமார்; ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். வரலட்சுமியும் நடிக்க ஆசைப்பட; சரத்குமார் பெரிய யோசனைக்கு பிறகு அதற்கு அனுமதி அளித்தார்.

சினிமாவில் வரலட்சுமி: பாய்ஸ் படத்திலேயே வரலட்சுமி நடித்திருக்க வேண்டியது. ஆனால் நடக்கவில்லை. பிறகு போடா போடி படத்தில் அறிமுகமானார் அவர். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இருந்தாலும் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தன. சூழல் இப்படி இருக்க அவர் விஷாலை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. ஆனால் நடிகர் சங்க பிரச்னை முற்றியதில் விஷாலுக்கும், சரத்குமாருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால்; விஷால் - வரலட்சுமி காதல் பாதியில் முறிந்ததாக கூறப்படுகிறது.
திருமணம்: சூழல் இப்படி இருக்க மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தார் வரு. நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். அவருக்கு டீன் ஏஜில் ஒரு மகளும் இருக்கிறார். மும்பையில் புராதான பொருட்களை விற்கும் ஆர்ட் கேலரி ஒன்றை நடத்திவருகிறார் நிக்கோலாய். சூழல் இப்படி இருக்க இருவருக்குமான திருமணம் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்றது. தாய்லாந்தில் திருமணம் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
களைகட்டிய வரவேற்பு: அதேசமயம் ஒருதரப்பினரோ தாய்லாந்தில் நடக்கவில்லை; சென்னை தாஜ் ஹோட்டலில்தான் நடந்தது என்று இன்னொருதரப்பினர் சொல்கிறார்கள். திருமணத்தை முடித்துவிட்டு வரவேற்பு நிகழ்ச்சி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்தது. இதில் முதலமைச்சர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள்வரை கலந்துகொண்டார்கள். இந்தச் சூழலில் இவர்களது திருமணம் குறித்து நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
பயில்வான் பேச்சு: இந்த விவகாரம் குறித்து பேசுகையில், "வரலட்சுமியின் திருமணத்தில் அவரது தாய் சாயா தேவி கலந்துகொள்ளவில்லை. தாய்லாந்தில் ஒரு சொகுசு கப்பலில் வைத்து நிக்கோலாய் வரலட்சுமிக்கு தாலி கட்டினார். ஆனால் அங்கு திருமணம் செய்துகொண்டால் இந்தியாவில் செல்லாது என்பதால்; சென்னை தாஜ் ஹோட்டலிலும் திருமணம் நடந்தது. லீலா பேலஸ் ஹோட்டலில் திருமண வரவேற்பு நடந்தது. அங்கு நடந்த நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் தனது மனைவியோடு வந்தார். எப்போதும் அமைதியாக இருக்கும் அவர்; வரலட்சுமி கேட்டுக்கொண்டதால் குத்தாட்டம் போட்டதாகவும் சொல்கிறார்கள்.
தங்க செருப்பு, 200 கோடி ரூபாய் சொத்து: நிக்கோலாய் தனது மனைவி வரலட்சுமிக்கு தங்கத்தில் செருப்பு கொடுத்தார். அதேபோல் வைரத்தில் சேலை கொடுத்தார். முக்கியமாக 200 கோடி ரூபாய் சொத்தை வரலட்சுமி பெயரில் எழுதி வைத்திருக்கிறார். இதற்கு மேல் என்ன வேண்டும். வரலட்சுமி ஹேப்பிதான். அவர் நிக்கோலாயை சொத்துக்காக மட்டும்தான் திருமணம் செய்திருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











