»   »  அடுத்து மலையாளப்பட ரீமேக்கா? ரஜினி தரப்பு மறுப்பு!

அடுத்து மலையாளப்பட ரீமேக்கா? ரஜினி தரப்பு மறுப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடுத்து மலையாளப்பட ரீமேக்கில் ரஜினி நடிக்கப் போகிறார் என்ற செய்தியை ரஜினி தரப்பு மறுத்துள்ளது.

மம்முட்டி, நயன்தாரா, ஜே.டி. சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் வெளியான மலையாள படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. கடந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி வெளியான இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.

Rajini denies Malayalam remake reports

இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிக்கப்போவதாக அவ்வப்போது கூறி வந்தனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில், 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தைப் பார்த்த ரஜினி சார், மம்மூட்டி பாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக' தெரிவித்தார்.

தற்போது 'கபாலி' மற்றும் '2.0' ஆகிய படங்களில் நடித்து வரும் ரஜினி சார் அடுத்த ஆண்டு இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க தேதிகள் ஒதுக்குவார் என்றும் கூறியிருந்தார்.

இது குறித்து ரஜினி தரப்பில் விசாரித்த போது, "2.0' படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் ரஜினி சார். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடியும் என்று தெரியாது. மேலும், அப்படத்துக்கு பிறகு ரஜினி சார் யாருக்குமே படம் செய்து தருவதாக வாக்களிக்கவில்லை. 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் ரீமேக் செய்தியிலும் உண்மையில்லை" என்றனர்.

Read more about: rajini ரஜினி
English summary
The close circle of Rajinikanth has denied the reports about the actor's next movie is Baskar The Rascal remake.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil