அமெரிக்காவில் ஜாலியாக ஊர் சுற்றும் ரஜினி , தனுஷ்... வைரலாகும் போட்டோ!
ரஜினியுடன் இணைந்து தனுஷ் கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.
Recommended Video

சென்னை: அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த்துடன், நடிகர் தனுஷ் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பேட்ட பட வேலைகளை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், 20 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கிருக்கும் நாட்களில் ஓய்வெடுப்பது மட்டுமே முழுநேர வேலையாக அவர் செய்து வருகிறார்.

நியூயார்க் நகரில் கொட்டும் பனியில், குல்லா, ஸ்வெட்டர் அணிந்து சிலருடன் நின்று அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் இருதினங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் நடிகர் தனுஷும் ரஜினியுடன் இணைந்திருக்கிறார். அமெரிக்காவில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் மாமனாரும், மருமகனும் செம ஸ்டைலாக இருக்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தான் ரஜினி அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் குடும்பத்தினரும் இணைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையின் போது ரஜினிகாந்த சென்னை திரும்புகிறார்.


Click it and Unblock the Notifications











