Rajini Dhanush: ”தனுஷ் லெவலே வேற... இதுக்கு ரஜினி காரணம் கிடையாது..” பிரபலம் சொன்ன சீக்ரெட்!
சென்னை: கோலிவுட்டின் இளம் ஹீரோக்களில் ஒருவரான தனுஷ், தற்போது பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார்.

தமிழில் கேப்டன் மில்லர், டி 50 இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு படம் என ரொம்பவே பிஸியாக காணப்படுகிறார்.
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை மாஸ் காட்டும் தனுஷ் வளர்ச்சிக்கு ரஜினி காரணமில்லை என மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.
மேலும், தனுஷ் தற்போது விஜய், அஜித், சிம்பு ஆகியோரை விட வேற லெவலுக்கு சென்றுவிட்டதாகவும் பேட்டிக் கொடுத்துள்ளார்.
தனுஷ் இப்போ வேற லெவல்
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, திருடா திருடி என ஆரம்ப காலங்களில் தனுஷ் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. பின்னர் சில படங்கள் தோல்வியை தழுவியதும், இயக்குநர் வெற்றிமாறனுடன் பொல்லாதவன் படத்தில் இணைந்தார்.
வெற்றிமாறன் படங்களில் நடிக்கத் தொடங்கிய பின்னர் தான் தனுஷின் கேரியர் வேற லெவலுக்குச் சென்றது. அதேநேரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரஜினி மூலம் சினிமாவில் அதிகம் வாய்ப்புகள் கிடைக்கும் என பிளான செய்து அவரது மகளை தனுஷ் திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்பட்டது.
ஆனால், தனுஷ் அதைபற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் சினிமாவின் அனைத்து ஏரியாக்களிலும் அடித்து நொறுக்கினார். ஒருகட்டத்தில் மனைவி ஐஸ்வர்யாவையும் விவாகரத்து செய்தார் தனுஷ். இன்னொருபக்கம் கோலிவுட்டில் இருந்து பாலிவுட், ஹாலிவுட் என வேற லெவலில் பட்டையை கிளப்பி வருகிறார். இதுபற்றி பேட்டிக் கொடுத்துள்ள மீசை ராஜேந்திரன், தனுஷின் வளர்ச்சிக்கு ரஜினி காரணம் இல்லை எனக் கூறியுள்ளார்.
அதாவது தனுஷ் இப்போது விஜய், அஜித்துக்கே டஃப் கொடுத்து வருவதாகவும், அவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, ஹாலிவுட் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இதெல்லாம் தனுஷின் திறமைக்கு கிடைத்த வெற்றி. அவருக்கு ரஜினி எந்த உதவியும் செய்யவில்லை, அதேபோல் ரஜினி உதவி செய்யும் அளவிற்கு தனுஷின் திறமை கிடையாது, அவர் வேற லெவலுக்கு சென்றுவிட்டார்.

தனுஷுடன் அடிக்கடி சிம்புவை கம்பேர் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய், அஜித்தே தனுஷ் பக்கம் நெருங்க முடியவில்லை எனும்போது, சிம்பு பற்றியெல்லாம் கேட்கவே வேண்டாம் என்றுள்ளார். நடிகர், பாடகர், பாடலாசிரியர், கதையாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என தனுஷின் வளர்ச்சி ரொம்பவே பெரியது. அதனால் தான் அவர் ஒரே நேரத்தில் ஏழெட்டு படங்களில் நடிக்க முடிவதாக மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











