மனைவி ரஜினியின் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் விஷ்ணு

By Mayura Akilan

விஷ்ணுவை ஹீரோவாக நடிக்க வைத்து படம் இயக்கப் போகிறார் அவரது மனைவி ரஜினி.

தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் தற்போது அதிகரித்து வருகிறார்கள். சாரதா ராமநாதன், ஜெ.எஸ். நந்தினி, ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த், லட்சுமி ராமகிருஷ்ணன், மற்றும் கிருத்திகா உதயநிதி வரிசையில் தற்போது விஷ்ணுவின் மனைவி ரஜினியும் இணைந்துள்ளார்.

முண்டாசுப்பட்டி வெற்றிக் களிப்பில் திளைத்துக் கொண்டிருக்கும் நடிகர் விஷ்ணுவின் மனைவி ரஜினிக்கு சினிமா இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் லட்சியம். ஐஸ்வர்யா தனுஷ் போல இவரும் தன்னுடைய முதல் படத்தை கணவர் விஷ்ணுவை வைத்து இயக்கப் போகிறாராம்.

துணை இயக்குநராக

துணை இயக்குநராக

கிருத்திகா உதயநிதி இயக்கிய வணக்கம் சென்னை படத்திலும், சீனு ராமசாமியுடன் நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி பயிற்சி எடுத்துள்ளார் ரஜினி.

கணவருக்கான கதை

கணவருக்கான கதை

விரைவில் அவர் படம் ஒன்றை இயக்க இருக்கிறார் அதில் ஹீரோவாக நடிக்க இருப்பவர் கணவர் விஷ்ணு. தன்னுடைய கணவருக்காகவே கதையை தயார் செய்து வைத்துள்ளாராம் ரஜினி.

மனைவி இயக்கத்தில்

மனைவி இயக்கத்தில்

‘'என் மனைவி இயக்கும் படத்தில் நான்தான் ஹீரோவாக நடிக்கிறேன். முதலில் அவர் இரண்டு கதைகள் தயார் செய்து வைத்திருந்தார். இருப்பினும் தற்போது வேறு கதையும் எழுதிக் கொண்டிருக்கிறார். அடுத்த வருடம் படம் இயக்குவார். அதில் நான் ஹீரோவாக நடிக்கிறேன்'' என்று கூறியுள்ளார் விஷ்ணு.

பேஷன் டிசைனர்

பேஷன் டிசைனர்

கிருத்திகா உதயநிதி படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்தபோது காஸ்டியூம் டிசைனராகவும் பணிபுரிந்தாராம். பிரியா ஆனந்த் அணிந்திருந்த ஆடைகளை வடிவமைக்க சொல்லி கேட்டாராம் கிருத்திகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X