Rajini: லிங்குசாமியை தொடர்ந்து ரஜினியை சந்தித்த இளம் இயக்குநர்... பரபரக்கும் தலைவர் 172 அப்டேட்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் லோகேஷ் இயக்கும் தலைவர் 171-ல் நடிக்கவிருக்கும் ரஜினி, தனது அடுத்தப் படத்துக்கான கதை கேட்பதில் தீவிரம் காட்டி வருகிறாராம். லிங்குசாமியை அடுத்து தற்போது ரஜினியை இன்னொரு பிரபல இயக்குநரும் சந்தித்துள்ளார்.

தலைவர் 172 ரேஸில் இளம் இயக்குநர்
அண்ணாத்த படத்தின் தோல்வியில் இருந்து வெறித்தனமாக மீண்டு வந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி வரை வசூலித்த இந்தப் படம், ரஜினிக்கு மிகப் பெரிய கம்பேக் எனலாம். இதனையடுத்து மீண்டும் உற்சாகமாக படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

 Rajini: Director Mari Selvaraj met Superstar Rajinikanth for Thalaivar 172

தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதன்பின்னர் தற்போது தசெ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. வேட்டையன் படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணைகிறார் ரஜினி. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினியை இரு தினங்களுக்கு இயக்குநர் லிங்குசாமி சந்தித்திருந்தார். இதனால் தலைவர் 172 படத்தை லிங்குசாமி இயக்கலாம் என தகவல்கள் வெளியாகின. தலைவர் 171 தான் ரஜினியின் கடைசிப் படம் என சொல்லப்பட்ட நிலையில், அதன் பின்னரும் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் சில இயக்குநர்களை அழைத்து கதை கேட்டு வருகிறாராம்.

இந்நிலையில், லிங்குசாமியை தொடர்ந்து தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ்ஜும் ரஜினியை சந்தித்துள்ளார். ரஜினியை மாரி செல்வராஜ் சந்தித்த போட்டோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது. பரியேறும் பெருமாள் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், இரண்டாவது படமான கர்ணனில் தனுஷுடன் இணைந்தார். கர்ணன் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார்.

அதன்பின்னர் வாழை படத்தை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், அடுத்து துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு படமும், தனுஷ் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்கவுள்ளார். இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினியையும் சந்தித்துள்ளார் மாரி செல்வராஜ். இதன் மூலம் தலைவர் 172 இயக்குநர் ரேஸில் மாரி செல்வராஜ்ஜும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ரஜினி - மாரி செல்வராஜ் கூட்டணி இணைந்தால், அது, பா ரஞ்சித்தின் கபாலி, காலா மாதிரி தரமான மூவியாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X