Rajini: “ரஜினி தான் எப்பவும் ரியல் கிங்... அதுல 1% கூட்டம் கூட எனக்கு வராது..”: துல்கர் சல்மான் ஓபன்!

சென்னை: மலையாள முன்னணி ஹீரோவான துல்கர் சல்மான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் குறித்து மனம் திறந்துள்ளார்.

அவரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா ஓணம் ஸ்பெஷலாக வெளியாகிறது.

இதனை முன்னிட்டு கிங் ஆஃப் கோதா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் துல்கர் சல்மான் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ரஜினி தான் ரியல் கிங் என கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 Rajini: Dulquer Salmaan praised Rajinikanths Jailer Film

ரஜினி தான் எப்போதும் ரியல் கிங்:மலையாள டாப் ஹீரோக்களில் ஒருவரான துல்கர் சல்மான், தற்போது பான் இந்தியா படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். குரூப், சுப், சல்யூட், சீதா ராமம் என அடுத்தடுத்து துல்கர் சல்மானின் படங்கள் வெளியாகி நலல் வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து இம்மாதம் ஓணம் ஸ்பெஷலாக கிங் ஆஃப் கோதா திரைப்படம் வெளியாகவுள்ளது.

கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது. ஆக்‌ஷன் ட்ரீட்டாக அமைந்துள்ள இந்த ட்ரெய்லர் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதனையடுத்து கிங் ஆஃப் கோதா படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் கிங் ஆஃப் கோதா ப்ரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கிங் ஆஃப் கோதா படக்குழுவினருடன் துல்கர் சல்மான் கலந்துகொண்டார். அப்போது கிங் ஆஃப் கோதா திரைப்படம் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் குறித்தும் மனம் திறந்து பேசினார். அதாவது, "என்றும் அவர்தான் ரியல் கிங் என்பதை நிரூபித்திருக்கிறார் ரஜினி சார். ஜெயிலர்' படத்துக்கு வந்த கூட்டத்துல ஒரு சதவிகிதம் என் படத்துக்கு வந்தாலே அது ரொம்ப பெரிய விஷயம்!" என பேசினார்.

 Rajini: Dulquer Salmaan praised Rajinikanths Jailer Film

இதனைக் கேட்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா படமும் வெற்றிப் பெறும் என வாழ்த்தினர். முன்னதாக ஜெயிலர் படம் வெளியாகும் திரையரங்குகளில் கிங் ஆஃப் கோதா ட்ரெய்லர் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால், ஜெயிலருக்கு ஒருநாள் முன்பே கிங் ஆஃப் கோதா ட்ரெய்லர் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யாவின் 43வது படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கவுள்ள இப்படத்தின் அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், மேலும் ஒரு தமிழ்ப் படத்திலும் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தை, அட்லீயின் உதவியாளர் கார்த்திகேயன் வேலப்பன் இயக்கவுள்ளாராம். இதில் துல்கர் சல்மானுடன் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு 'கோலி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X