பேட்ட ஓடிய தியேட்டரில் ரசிகர் கொலை: ரஜினி எவ்வளவு ஃபீல் பண்ணுவார்! #Petta
Recommended Video

சென்னை: ரஜினி ரசிகர் ஒருவர் பேட்ட படம் பார்க்கச் சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் கடந்த 10ம் தேதி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பேட்ட படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற ரஜினி ரசிகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை
உடுமலைப்பேட்டையில் உள்ள லதாங்கி தியேட்டரில் பேட்ட படம் பார்க்க சென்றார் மணிகண்ட பிரபு. அவர் தியேட்டரில் தனது இருக்கையில் அமர்ந்து ரஜினி ஸ்டைலில் சிகரெட் பிடிக்க அது பக்கத்து இருக்கையில் இருந்த திருமூர்த்தி என்பவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து திருமூர்த்தி மணிகண்ட பிரபுவை தாக்கினார். இதில் மணிகண்ட பிரபு உயிர் இழந்தார்.

நடிகர்கள்
ரஜினி சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டார். ஆனால் அவர் ரசிகர்கள் அதுவும் ஏழை எளிய ரசிகர்கள் அவர் ஸ்டைலில் தம்மடித்து உடம்பை கெடுத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் அப்படி ஸ்டைலாக தம்மடித்து ஒருவர் அடி வாங்கி இறந்துள்ளார். கட்டிட தொழிலாளியான மணிகண்ட பிரபுவின் இழப்பு அவரின் குடும்பத்திற்கு பேரிழப்பாகும்.

தியேட்டர்
பேட்ட படம் ஓடிய தியேட்டரில் ரசிகர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட செய்தி வெளியாகி ரஜினி ரசிகர்கள் அனைவரும் அதை பெருமையாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இப்படி ஒரு கொலை நடந்து அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தலைவர்
தனது ரசிகர்கள் தம்மடிப்பது, மது அருந்துவதை ரஜினி விரும்ப மாட்டார். அதை புரிந்து கொண்டு ரசிகர்கள் நடந்தால் நன்றாக இருக்கும். பேட்ட படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த கொலை சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











