twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெயம் ரவி.. என்ன செய்யுறோம்னு தெரிஞ்சுதான் செய்றீங்களா? யு டச்டு எ ராங் நர்வ்!

    |

    சென்னை: கோமாளி பட ட்ரெயிலரில் நடிகர் ரஜினிகாந்தை கிண்டல் செய்திருப்பது அவரது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்துள்ள படம் 'கோமாளி'. இந்த படத்தை இயக்குநர் ப்ரதீப் இயக்கியுள்ளார். ஐசரி கணேஷ் படத்தை தயாரித்துள்ளார்.

    இந்நிலையில் படத்தின் டிரைலர் சனிக்கிழமை மாலை வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே யுடியூப்பில் பல லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது இந்த ட்ரெயிலர்.

    கோமா

    கோமா

    அந்த டிரைலரில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை கிண்டலடித்துள்ளனர். அதாவது 19 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் ஜெயரம் ரவி 2016ஆம் ஆண்டு மீண்டு வருவதாக கதை உருவாக்கப்பட்டுள்ளது.

    டிவியில் வரும் செய்தி

    டிவியில் வரும் செய்தி

    கோமாவில் இருந்து மீண்டு வரும் ஜெயம் ரவி தனக்கு கோமா என்பதை நம்ப மறுக்கிறார். இதனை நிரூபிக்க யோகி பாபு டிவியை ஆன் செய்கிறார். அதில் ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்கிறார்.

    ரஜினியை கேலி

    ரஜினியை கேலி

    இதனை பார்க்கும் ஜெயம் ரவி, யாரை ஏமாற்றப்பார்க்கிறீர்கள் இது 96 என்கிறார். 1996-ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளது அந்த காட்சி.

    சர்வ சாதாரணமாக

    சர்வ சாதாரணமாக

    ரஜினியை கிண்டல் செய்யும் விதமாக அமைந்துள்ள இந்தக் காட்சி பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. சமூகத்தில் பெரிய ஆளாக மதிக்கப்படும் ஒரு நபர், உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள ஒரு நடிகர், தமிழ் சினிமாவின் முக்கியமான நபர், இப்படிப்பட்ட ரஜினிகாந்தை சர்வ சாதாரணமாக கிண்டல் செய்துள்ளனர் கோமாளி படக்குழுவினர்.

    மறுத்திருக்க வேண்டாமா?

    மறுத்திருக்க வேண்டாமா?

    கோமாளி படத்தில் ரஜினியை கிண்டல் செய்திருப்பதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டைரக்டர் இந்தக் காட்சிக் குறித்து சொன்னாலும் அதனை ஜெயம் ரவி மறுத்திருக்க வேண்டாமா? ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என காத்திருப்பது அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல.

    எடுத்தோம் கவிழ்த்தோம்

    எடுத்தோம் கவிழ்த்தோம்

    இப்படி இருக்கையில் ஜெயம் ரவி இப்படி ஒரு காட்சியில் நடிக்க எப்படி சம்மதித்தார்? அரசியலுக்கு எப்போது வரவேண்டும் என்பது ரஜினியின் விருப்பம். யாரும் வலுக்கட்டாயமாக இழுத்து வர முடியாது. மேலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என ரஜினியும் எந்த முடிவும் எடுக்க முடியாது.

    காத்திருக்கலாம்

    காத்திருக்கலாம்

    அரசியலுக்கு வருவதும், தேர்தலில் போட்டியிடுவதும் சாதாரண விஷயமல்ல. எதையும் சரியான பருவத்தில் பயிர்செய்தால் தான் அதற்கான பலனையும் பயனையும் பெற முடியும். இதனை மனதில் வைத்து அந்த சரியான பருவத்திற்காக ரஜினி காத்திருக்கலாம்.

    கோமாளி ஹேஷ்டேக்

    கோமாளி ஹேஷ்டேக்

    அதனை ஒரு விஷயமாக எடுத்து கேலியும் கிண்டலும் செய்வது ஏற்ககூடியது அல்ல. அதுவும் ஜெயம் ரவி போன்ற ஒரு நடிகர் இப்படி ஒரு வேலையை செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கோமாளி ஹேஷ்டேக்கில் பதிவாகும் தகவல்களை பார்த்தாலே புரியும்.

    டச்டு எ ராங் நர்வ்

    டச்டு எ ராங் நர்வ்

    ஆனாலும் ஜெயம் ரவி சொன்னதில் என்ன தவறு என்ற குரலும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. எப்படியோ ஜெயம் ரவி ஒரு தவறான நரம்பை தொட்டுவிட்டார் என்றே கொதிக்கின்றனர் ரஜினியின் ரசிகர்கள்!

    English summary
    Rajini fans are angry on Jayam Ravi for teasing Rajinikanth in Comali Movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X