Jailer Review - ஜெயிலர்.. நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புகிறார்களா விஜய் ரசிகர்கள்?.. ஆரம்பித்த பஞ்சாயத்து

சென்னை: Jailer Review (ஜெயிலர் விமர்சனம்) ஜெயிலர் படத்திற்கு விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புகிறார்கள் என ரஜினி ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கியிருக்கிறார். மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பீஸ்ட்டில் வாங்கிய அடியை இதன் மூலம் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு நெல்சனும், இரண்டு படங்களில் சறுக்கியதை இதன் மூலம் சரி செய்ய வேண்டும் என்ற தீவிரத்தில் ரஜினிகாந்த்தும் பணியாற்றியிருக்கின்றனர்.

Rajini fans are saying that Vijay fans are deliberately spreading negative reviews for Jailer

ஜெயிலர் ரிலீஸ்: பெரிய எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதும் ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இரண்டு வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் படம் வருவதால் அவரது ரசிகர்கள் இதனை ஒரு திருவிழா போலவே கொண்டாட ஆரம்பித்திருக்கின்றனர். கட் அவுட்டுகள், பேனர்கள் என திரையரங்குகள் களைகட்டியிருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு சிறிய ஏமாற்றமாக இருப்பது அதிகாலை காட்சி இல்லாததுதான்.

அதிகாலை காட்சி பார்த்த ரசிகர்கள்: அதேசமயம் வெளிநாடுகளில் அதிகாலை காட்சி திரையிடப்பட்டது. எனவே உலகமெங்கும் வசிக்கும் தமிழர்கள் அதிக ஆர்வத்துடன் அதிகாலை காட்சிக்கு சென்றனர். திரையரங்குகளில் இருக்கும் புகைப்படங்களையும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து தங்களது விமர்சனத்தையும் ட்வீட் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

எப்படி இருக்கு படம்: அதன்படி படமானது தங்களுக்கு முழு திருப்தியை கொடுத்திருப்பதாகவும்; முழுக்க முழுக்க ரஜினி படத்தில் மாஸ் செய்திருக்கிறார்; யோகிபாபு - ரஜினியின் காமெடி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என பெரும்பாலானோர் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தின் மூலம் வெறித்தனமான கம்பேக் கொடுத்துவிட்டார். பீஸ்ட்டால் ரோஸ்ட் செய்தவர்களுக்கு பதிலடி அளித்திருக்கிறார் எனவும் கூறுகின்றனர்.

Rajini fans are saying that Vijay fans are deliberately spreading negative reviews for Jailer

நெகட்டிவ் விமர்சனம்: படத்துக்கு பெரும்பாலானோரிடத்திலிருந்து பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் சிலர் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனத்தையும் கூறிவருகின்றனர். அதாவது ஜெயிலர் படத்தின் திரைக்கதை மோசமாக இருக்கிறது; கதை ஆங்காங்கே சொதப்பியிருக்கிறது. டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகவே இல்லை. முதல் பாதி பரவாயில்லை ரகம். இரண்டாம் பாதி மோசம் என பதிவிடுகின்றனர்.

விஜய் ரசிகர்கள்: இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தை மனதில் வைத்துக்கொண்டு விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றே ஜெயிலர் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனத்தை பரப்புகின்றனர். ஜெயிலர் படம் நல்லா இல்லை என்று சொல்பவர்களின் டிபியை பார்த்தால் அதில் விஜய்தான் இருக்கிறார். இதை வைத்தே அவர்கள் விஜய் ரசிகர்கள் என்பதை உறுதி செய்துகொள்ளலாம் என ரஜினி ரசிகர்கள் கமெண்ட்ஸில் பதிலடி கொடுத்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X