»   »  பிறந்தநாளும், அதுவுமா ரஜினி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட செல்வராகவன்

பிறந்தநாளும், அதுவுமா ரஜினி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட செல்வராகவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்.ஜே. சூர்யாவை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி ரஜினி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

இயக்குனர் செல்வராகவன் கடந்த 5ம் தேதி தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.

தன்னை வாழ்த்திய இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவுக்கு செல்வா பதில் அளித்து ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.

சூப்பர் ஸ்டார்

நன்றி சார். நீங்கள் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நான் நம்புகிறேன் என்று தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எஸ்.ஜே. சூர்யாவுக்கு பதில் அளித்து ட்வீட்டினார் செல்வா.

ஏன்யா?

@selvaraghavan ஏன்யா பொறந்தநாள் வாழ்த்து சொல்றக்காகலாம் ஒருத்தர சூப்பர் ஸ்டார் ஆக்குற 😂😂 என செல்வாவின் ட்வீட்டை பார்த்த ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

சும்மா

@selvaraghavan மற்றொரு சூப்பர் ஸ்டார் இருக்க முடியாது. சும்மா எப்ப பாத்தாலும் அடுத்த சூப்பர் ஸ்டார்னு டாட் என ரசிகர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

போதையா?

செல்ராகவன் எதையாவது சொல்வதற்கு முன்பு யோசிங்க ப்ரோ.. போதையா??

English summary
Director Selvaraghavan's tweet addressing SJ Suryah as next superstar has irked Rajinikanth's fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil