தனுஷை பிடிக்காதுன்னு தலைவரை கலாய்க்கிறீங்களா?: சித்தார்த்தை விளாசிய ரஜினி ரசிகர்கள்
Recommended Video

சென்னை: தூத்துக்குடியில் போராடிய மக்களுடன் சமூக விரோதிகள் ஊடுருவியதாக ரஜினி தெரிவித்ததை விமர்சித்துள்ளார் நடிகர் சித்தார்த்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்நிலையில் தூத்துக்குடிக்கு சென்ற ரஜினிகாந்த் சமூக விரோதிகள் ஊடுருவியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
உரிமைக்காக போராடிய சாதாரண மக்களை சமூக விரோதிகள் என்பதா என்று ரஜினிக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
சித்தார்த்
சமூக விரோதிகள் தான் இத்தனை ஆண்டுகளாக தூத்துக்குடியை மாசு அடைய வைத்தது என்று அடுத்து கூறுவார்கள் என சித்தார்த் ட்வீட்டியுள்ளார்.
கோபம்
ரஜினியின் பெயரை குறிப்பிடாமல் அவரை விமர்சித்த சித்தார்த்தின் ட்வீட்டை பார்த்த தலைவர் ரசிகர்கள் கோபம் அடைந்து அவரை கண்டமேனிக்கு திட்டித் தீர்த்துள்ளனர்.
மாமனார்
தனுஷை பிடிக்காது என்று அவர் மாமனாரை குறை சொல்கிறீர்களா என்று சித்தார்த்திடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சமூக விரோதிகள்
உங்களையும் சமூக விரோதி என்று சொல்லிவிடப் போகிறார்கள் சித்தார்த்.
பப்ளிசிட்டி
என்ன சித்தார்த், பட வாய்ப்பு இல்லாததால் ரஜினியை விமர்சித்து விளம்பரம் தேடுகிறீர்களா? என்று கேட்கிறார்கள்.
உதயநிதி
முன்னதாக சமூக விரோதிகள் கருத்து குறித்து ட்வீட்டிய உதயநிதி ஸ்டாலினையும் ரஜினி ரசிகர்கள் விளாசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











