Just In
- 1 hr ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 1 hr ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 1 hr ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
- 3 hrs ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
Don't Miss!
- Sports
ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்!
- News
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'கபாலி வருடாபிஷேகம்'... மதுரையில் திரளும் ரஜினி ரசிகர்கள்... ஜான் விஜய், ஜீவா பங்கேற்பு!
மதுரை: ஒரு வருடமாக மதுரையில் ஓடிக்கொண்டிருக்கும் கபாலி திரைப்படத்தை 'வருடாபிஷேக'மாக, ரசிகர்கள் கொண்டாட உள்ளார்கள். இதில் பங்கேற்க தமிழகம் முழுவதிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் ரசிகர்கள் மதுரையை நோக்கி வந்த வண்ணம் உள்ளார்கள்.
ஜூலை 30, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் திருப்பரங்குன்றம் மயில் மண்டபத்தில் கபாலி கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின்றன. ரசிகர்கள் தங்கள் கபாலி அனுபவத்தையும், ரஜினியின் அரசியல் பற்றியும் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். மதியம் 1.30 மணி வரை ரசிகர்களின் பங்கேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து உணவு இடைவேளை. மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மணி இம்பாலா
மாலை 3.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மணி இம்பால திரையரங்கம் செல்கிறார்கள். மாலை 4 மணிக்கு யானை வரவேற்புடன் செண்டை மேளம் முழங்க விழா தொடங்குகிறது. பிரபலங்கள் தங்கள் கபாலி அனுபவம், ரஜினி அரசியல் பற்றிப் பேசுகிறார்கள்.

ஜான் விஜய், ஜீவா
கபாலியின் நண்பன் அமீராக நடித்த ஜான் விஜய், நடிகர் ஜீவா, நடிகை லட்சுமி, இயக்குனர் சாய் ரமணி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். வேறு அலுவல்கள் இருந்தாலும் அதை மாற்றி விட்டு வர முயற்சி செய்வதாக 'வீரசேகரன்' கிஷோர் கூறியுள்ளார். காலா படப் பணிகளில் முழுவீச்சுடன் பணிபுரிந்து வரும் இயக்குனர் பா.ரஞ்சித்தும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

சமூக வலைத் தள ரசிகர்கள்
இந்த விழாவில் ரசிகர் மன்றத்தை சார்ந்தவர்களுடன், ரசிகர் மன்றங்களுக்கு வெளியே இணையத் தளங்களில் செயல்பட்டு வரும் இளம் ரசிகர்களும் கலந்து கொள்கின்றனர். சமூத் தளத்தில் இயங்கி வரும் முக்கிய ரசிகர்களுக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளார் பழனி பாட்சா சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார்.

ஐடி நிறுவன பணியாளர்கள்
சமூகத் தளங்களில் ரஜினி ரசிகர்களின் செயல்பாடுகள் பற்றியும், தொடர்ந்து செயல்பட வேண்டிய உத்திகள் பற்றியும், காலை நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட இருக்கிறது. பெங்களூரில் பிரபல ஐடி நிறுவனங்களில் உயர்பணியில் இருக்கும் ரஜினி ரசிகர்களும் இதில் கலந்து கொண்டு, சமூகத் தளத்தில் எவ்வாறு செயல்படுவது என்று எடுத்துரைக்க உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க ரசிகர்களால் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- 'ரைட்' பாண்டியன்