சிவா செஞ்சுட்டாரு அண்ணே.. ஆண்டவன் ஆட்டம் ஆரம்பம்.. திக்குமுக்காடும் டிவிட்டர்! #அண்ணாத்த

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 படத்தின் தலைப்பு வெளியாகியுள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

ரஜினி நடிக்கும் 168 படத்தின் பெயர் 'அண்ணாத்த'! கெத்துதான் போங்க!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாத் நடிக்கும் 168 வது படத்தின் பெயர் அண்ணாத்த என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ஸர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக படத்தின் பெயரை வெளியிட்டது.

படத்தின் பெயரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்று படத்தின் அப்டேட் வெளியாகிறது என்றதுமே #Thalaivar168 என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்தனர்.

ட்ரென்டிங்

ட்ரென்டிங்

இந்நிலையில் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதும், #Annaatthe, #அண்ணாத்த ஆகிய ஹேஷ்டேக்குகளையும் ட்ரென்ட் செய்ய தொடங்கிவிட்டனர். இந்த ஹேஷ்டேக்குகள் சென்னை ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளன. அதேநேரத்தில் படத்தின் தலைப்பு குறித்தும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

ஆண்டவன் ஆட்டம்

படத்தின் டைட்டிலை பார்த்த இந்த ரசிகர் ஆண்டவன் ஆட்டம் ஆரம்பம் என பதிவிட்டுள்ளார். ரணகளம் சகலை சாப் ரகளை நம்ம #அண்ணாத்த, அவன் லிமிட் அலறும் வந்து கட போடாத என அனிருத் பாடிய பாடலை மேற்கோள் காட்டியிருக்கிறார் ரஜினியின் இந்த ரசிகர்.

தரமான சம்பவம்

அன்று முரட்டு காளை.. இன்று அண்ணாத்த என பதிவிட்டிருக்கிறார் இந்த ரசிகர். அண்ணண்டா எல்லாருக்கும் இவர் அண்ணண்டா! அண்ணாத்த பிஜிஎம் மாஸ் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். தரமான சம்பவம்.. இசை அருமை என பாராட்டியிருக்கிறார் இந்த ரசிகர். அண்ணாத்த- செம டைட்டில்.. டைட்டிலே ஒரு கெத்த தெரியுது.. தலைவா.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

அள்ளும் லைக்ஸ்

சில வருஷம் முன்னாடி பாட்டாவரும் போதே.. இந்த #அண்ணாத்த கெத்துதான்.. என்று கூறுகிறார் இந்த ரசிகர். அண்ணாத்த டைட்டில் வீடியோவை இமான், சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் லைக் செய்திருக்கின்றனர். இந்த டைட்டில் வீடியோ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X