ஆல் லாங்குவேஜூலயும் அசத்திட்டிங்க தலைவா! - ரஜினியின் பேச்சுக்கு ஆர்ப்பரித்த ரசிகர்கள்

By Shankar

துபாய்: வாவ்... இதற்கு முன்பு இப்படி ஒரு இசை வெளியீட்டு நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை என ரசிகர்கள், பொதுவான சினிமா விரும்பிகள் கொண்டாடும் அளவுக்கு மிகப் பிரமாண்டமாக, பொழுதுபோக்காக அமைந்துவிட்டது ரஜினியின் 2.ஓ துபாய் இசை வெளியீட்டு நிகழ்ச்சி.

இந்திய நேரப்படி 12 மணிக்குத்தான் 2.ஓ வின் நட்சத்திர அறிமுகமே நடந்தது. அக்ஷய்குமார், ஷங்கர், ரஹ்மான் என வரிசைப்படி அழைத்தபிறது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அழைத்தனர். இதனை தமிழின் சார்பில் ஆர்ஜெ பாலாஜி, இந்திக்கு கரண் ஜோஹர், தெலுங்குக்கு நடிகர் ராணா என வரிசை கட்டி அழைத்தனர்.

Rajini fans celebrates the way of Rajini's replies onm stage

மூவரும் தத்தமது மொழிகளில் ரஜினியிடம் கேள்விகளை எழுப்பினர். மூவருக்கும் அவரவர் மொழிகளிலேயே மிகத் தெளிவாக பதிலளித்தார் ரஜினிகாந்த்.

தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் பதிலளித்த போதும், மிகத் தெளிவாக அந்தந்த மொழிகளிலேயே பேசி ரசிகர்களை பரவசப்படுத்தினார் ரஜினிகாந்த்.

தலைவா... ஆல் லாங்குவேஜுலயும் அசத்திட்டீங்க என ரசிகர்கள் மிகப் பெரிய கைத்தட்டல் எழுப்பினர் ரஜினிகாந்த் பேசி முடித்தபோது.

குறிப்பாக இந்தி மற்றும் தெலுங்கில் ரஜினியின் பதில்கள் படு ஷார்ப்பாக அமைந்தன. தமிழில் ஆர்ஜே பாலாஜி, எல்லோரும் கேட்கும் வழக்கமான கேள்விகளையே கேட்டார். ஆனால் ரஜினி அதற்கும் வித்தியாசமான பதில்களைக் கூறினார்.

கரண் ஜோகரும், ராணாவும் ஓடிவந்து ரஜினியின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற பிறகே கேள்விகளைக் கேட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X