ஏஆர் முருகதாஸ் நீங்க நிஜமாவே வெறியன்தான்.. தரமான சம்பவம்.. தெறிக்கும் டிவிட்டர்! #DarbarTrailer

Recommended Video

Darbar Official Trailer Release| Rajini speech| A.R.Murugadoss

சென்னை: தர்பார் படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் டிவிட்டர் வலைதளத்தை திணறடித்து வருகின்றனர்.

ஏஆர் முருகதாஸின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் முதல் முறையாக நடித்துள்ள படம் தர்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருக்கிறார். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வில்லனாக சுனில்ஷெட்டி

வில்லனாக சுனில்ஷெட்டி

இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியானது. இதில் சின்சியரான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். தர்பாரில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி நடித்துள்ளார்.

சில நிமிடங்களில்..

சில நிமிடங்களில்..

படத்தில் அனல் பறக்கும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. ட்ரெயிலர் ரிலீஸான சில நிமிடங்களிலேயே நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் யூட்யூப்பில் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்தியளவில் ட்ரென்டிங்

இந்தியளவில் ட்ரென்டிங்

இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் டிவிட்டரில் #DarbarTrailer என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரென்டிங்கில் உள்ளது.

என்ன ரெக்கார்டு..

அந்த விசுவாசம் ரெக்கார்டு என்னனு கேளு.. அந்த பிகில் ரெகார்ட் என்னனு கேளு.. அய்யோ இப்ப நான் ஏதாச்சும் ரெகார்டை உடைக்கணுமே என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

மாஸ் சீன்ஸ்

நாங்கள் எதிர்பார்த்ததுப் போலவே மாஸ் சீன்ஸ் மாஸ் டயலாக்ஸோட இருக்கு ட்ரெயிலர் என்கிறார் இந்த ரசிகர்.

சும்மா கிழிச்சுட்டாரு

இது எப்டி இருக்குது.. தலைவர் சும்மா கிழிச்சுட்டாரு.. ஒரு மில்லியன் வியூஸ் ட்ரெயிலர் ரிலீஸ் ஆனதுமே என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

மிஸ் ஆகாது

அருமையான ட்ரைலர்.. இந்த படம் வெற்றி பெற தல ரசிகனாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
பொங்கல் அன்று முதல் நாள் முதல் காட்சி மிஸ் ஆச்சு இந்த வாட்டி மிஸ் ஆகாது என்று கூறுகிறார் இவர்.

தியேட்டர் கிழி

இது உண்மையாவே தியேட்டர் கிழி தான் என்கிறார் இந்த ரசிகர்.

நீங்க வெறியன்தான்

தலைவா.... மரண மாஸ் ட்ரெயிலர்.. ஏஆர் முருகதாஸ் நீங்க வெறியன்தான்.. பொங்கல் வரைக்கும் காத்திருக்க முடியாது. இது திரும்பவும் தலைவர் பொங்கல் என்கிறார் இந்த நெட்டிசன்.

ஒரு மிரட்டல் வில்லன்

படையப்பாவுக்கு அப்புறம் ஒரு மிரட்டல் வில்லன்..
அப்பாடா ரொம்ப நிம்மதி தலைவா.. தலைவர் vs சுனில் ஷெட்டி

ஒரிஜினலாவே வில்லன் மா

என்னா பாக்குற நான் ஒரிஜினலாவே வில்லன் மா.. என தர்பாரில் ரஜினி பேசிய டயலாக்கை பேசுகிறார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X