Darbar: தலைவர் ரசிகாஸ்.. திரும்பவும் ஒரு சிறப்பான, தரமான சம்பவம் காத்திட்டிருக்கு!
தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: ரஜினியின் தர்பார் போஸ்டர் குறித்து அவரது ரசிகர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு தர்பார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை சமூகவலைதளங்களில் அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,
மரண மாஸ் தலைவா
தர்பார் என்ற பெயர் மரண மாஸாக இருக்கிறது என சிலர் பதிவிட்டுள்ளனர். சிலர் கொல மாஸ் என்றும் போஸ்டரை வர்ணித்துள்ளனர். வாவ், சூப்பர், தலைவா என சிலர் கூறியுள்ளனர்.
மீண்டும் தரமான சம்பவம்
ரஜினி ரசிகர்கள் சிலர், "2020 பொங்கல் ரிலீஸ். மீண்டும் ஒரு திருவிழா வெளியீடு. மீண்டும் சிறப்பான, தரமான சம்பவம். ரிப்பீட் பாக்ஸ் ஆபிஸ்", என பதிவிட்டுள்ளனர்.
இவர் தான் பொறந்து வரனும்
"மரணம் மாஸு மரணம். டஃப்பு தரனும். அதுக்கு இவர் தான் பொறந்து வரணும். தலைவா வெறித்தனம் என்ற சொல்கூட குறைவு தான். நன்றி முருகதாஸ் சார்", என இந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

தலைவரோட ஆட்டம்
"இனி பாக்கத்தான போற தலைவரோட ஆட்டத்தை", என இவர் பதிவிட்டுள்ளார். இப்படி ஏராளமான ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதில் இருந்து தர்பார் டைட்டில் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications











