யாரு நீங்க என்று கேட்பது தலைவருக்கு ராசி: ரஜினி ரசிகர்கள் சமாளிபிகேஷன்

By Siva

Recommended Video

ரஜினியிடம் யாருங்க நீங்க என்று கேட்ட இளைஞர் விளக்கம்- வைரல் வீடியோ

சென்னை: தலைவரின் அரசியல் வாழ்க்கை இனி அமோகமாக இருக்கும் என்று ரஜினி ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த ரஜினிகாந்த் கட்சி துவங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் அவர்களுக்கு பணமும் அளித்துள்ளார்.

யார் நீங்க?

யார் நீங்க?

காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவர் ரஜினியை பார்த்து யாருங்க நீங்க என்று கேட்டது வைரலாகிவிட்டது. பலரும் அதை வைத்து ரஜினியை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பதில்

பதில்

#நான் தான்பா ரஜினிகாந்த் என்று ரஜினி அளித்த பதிலில் ஹேஷ்டேக் உருவாக்கி ட்விட்டரில் டிரெண்டாகவிட்டனர். இதை எல்லாம் பார்த்து ரஜினி ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

கமல்

கமல்

அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானபோது ஒரு காட்சியில் ரஜினியை பார்த்து கமல் ஹாஸன் யார் நீங்க என்று கேட்டார். அதன் பிறகு தலைவரின் சினிமா வாழ்க்கை சூடுபிடித்தது, தற்போது இந்த இளைஞர் அதே கேள்வியை கேட்டுள்ளதால் அவரின் அரசியல் வாழ்க்கையும் அமோகமாக இருக்கப் போகிறது என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

கலாய்

கலாய்

தூத்துக்குடி வரைக்கும் போய் தலைவர் அசிங்கப்பட்டதை பார்த்து ரசிகர்கள் எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கிறது என்று மற்றவர்கள் கிண்டல் செய்து கொண்டுள்ளனர். யார் தன்னை கிண்டல் செய்தாலும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாதவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X