மருமகனின் வளர்ச்சியில் கவனமாக இருந்த சூப்பர் ஸ்டார்… ரஜினியை மறந்த தனுஷ்… புலம்பும் ரசிகர்கள் !
சென்னை : நடிகர் தனுஷும் அவரது மனைவி மற்றும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்ர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தனுஷ் மிகச்சிறந்த நடிகராக இருந்த போதும், ஆரம்பகாலத்தில் அவருக்கு பக்கபலமாக இருந்தது ரஜினிகாந்த் தான். ஆனால், தற்போது அவரை தனுஷ் மறந்துவிட்டு இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாரே என்று ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

கூட்டாக அறிக்கை
தனுஷும் மற்றும் ஐஸ்வர்யாவும் அவரவர் சமூக ஊடக பக்கங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை கையெழுத்து போடும் பகுதியில் பெயரையும் அதற்கு முன்பாக சில வார்த்தைகளை மட்டும் மாற்றிக் கொண்டு வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், நண்பர்களாகவும், தம்பதியாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருத்தோம்.

பிரிந்தனர்
எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சரிப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றியமைத்தல் என இருந்தோம். இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.. தனுஷும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம் என பதிவிட்டுள்ளனர்.

ரஜினியால் பட வாய்ப்பு
இந்நிலையில், தனுஷ் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த 2000களில் அவருக்கு பக்கபலமாக இருந்தவர் ரஜினிகாந்த் தான். தனுஷ் சிறந்த நடிகர் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இருந்த போதும் அவருக்கு பல பட வாய்ப்புகள் ரஜினியால் கிடைத்தவை தான்.

மருமகனின் வளர்ச்சியில் கவனம்
மருமகன் தனுஷின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்திய ரஜினி. அவருக்காக காலா படத்தில் நடித்துக் கொடுத்தார். இப்பக்கூட ஒரு படம் தனுஷுக்காக பண்ணுவதற்கு பேசிக்கொண்டிருந்தார். மகள் சௌந்தர்யா படம் எடுத்து நஷ்டப்பட்டபோதும் ரஜினி அவர்களுக்கு துணையாக நின்று உதவினார், மருமகன் தனுஷ் நஷ்டத்தில் இருந்தபோதும் மகள் ஐஸ்வர்யாவுக்காக ரஜினி பல உதவிகளை செய்துள்ளார்.
Recommended Video

ரஜினியை மறந்த தனுஷ்
தனுஷை விமர்சிக்காமல் ரஜினி உதவி மட்டுமே செய்துள்ளார். ரஜினிக்காக எத்தனையோ தயாரிப்பாளர் காத்துக்கிடக்கும்போது, வருடத்திற்கு 500 கோடிக்கு டர்னோவர் ஆகும் ரஜினியை சார்ந்த படவேலைகளை மருமகனுக்காக செய்துகொடுத்த ரஜினியை தனுஷ் மறந்துவிட்டாரே என்று இணையத்தில் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











