twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிகாந்தின் அடுத்த படம் இவருக்குதான்? தீயாய் பரவும் போட்டோ.. குதூகலத்தில் ரசிகர்கள்!

    |

    Recommended Video

    Darbar Packup : படப்பிடிப்பு முடிந்தது It's Wrap

    சென்னை: ரஜினியின் அடுத்த படம் இந்த டைரக்டருக்குதான் என அவரது ரசிகர்கள் போட்டோ ஒன்றை பகிர்ந்து வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த போதும் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார். இதனால் ஒரு பக்கம் ரஜினியின் அரசியல் கட்சி மீதான ஆர்வம் மறுபக்கம் அவர் நடிக்கும் படங்களின் மீதான ஆர்வமும் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.

    தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தின் போட்டோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இணையத்தை கலக்கி வருகிறது.

    இயக்குநர் சிவா

    இயக்குநர் சிவா

    இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தர்பார் படம் பொங்கலுக்கு ரிலிஸாகும் என தெரிகிறது. இந்நிலையில் தனது அடுத்தப்படத்திற்கான கதைகளை கேட்டு வருகிறார் ரஜினிகாந்த். இதனிடையே ரஜினி, இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது

    சந்திப்பு

    சந்திப்பு

    இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த், சிறுத்தை சிவா அண்மையில் சந்தித்தனர்.

    ஆஷ்ரம் பள்ளி விழா

    அப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்திற்கான வேலைகள் தீபாவளிக்குப் பிறகு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு லதா ரஜினிகாந்தின் ஆஷ்ரம் பள்ளி விழாவில் இயக்குநர் சிவா கலந்து கொண்டார்.

    ரசிகர்கள் கருத்து

    அதற்கான புகைப்படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், ரஜினிகாந்தின் 167-வது படத்தை சிவா இயக்க இருப்பது உறுதி என ரஜினியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Sanjeev is the star of Sun TV's kanmani Series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X