காஷ்மீர் மக்களுக்காக ரூ 1 லட்சம் உதவிப் பொருள்கள் அனுப்பிய ரஜினி ரசிகர்கள்!
பொள்ளாச்சி: ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக ரூ 1 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை ரஜினி ரசிகர்கள் அனுப்பி வைத்தனர்.
காஷ்மீரில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதால், அம்மாநில மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

இந்த மக்களுக்கு தங்களாலான உதவியை வழங்கிட முடிவு செய்த 'ரஜினியின் முரட்டு பக்தர்கள்' என்ற குழுவைச் சேர்ந்தவர்கள், வெள்ள நிவாரணத்திற்கு ரூ ஒரு லட்சம் மதிப்பிலான மருந்துப் பொருட்க்கள், உடைகள் மற்றும் சில அத்தியாவசிய பொருட்களை ரெட் கிராஸ் அமைப்பினர் மூலம் அனுப்பினர்.
இது தவிர மேலும் பல உதவிகளை செய்யப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தள்ளனர். இந்தக் குழுவினரைத் தொடர்ந்து இன்னும் பல ரசிகர்களும் இத்தகையா உதவிகளை செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications