கர்மா ச்சும்மா வச்சு செய்யும்! நீ என்ன பெரிய ஹாலிவுட் டைரக்டரா? ரஜினி ரசிகர்கள் ஆவேசம்!

சென்னை: கோமாளி படத்தில் ரஜினியை கிண்டலடித்திருப்பதற்கு அவரது ரசிகர்கள் ஆவேசமடைந்துள்ளனர்.

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் ட்ரெயிலர் கடந்த சனிக்கிழமை மாலை வெளியானது. இந்தப்படத்தை இயக்குநர் ப்ரதீப் இயக்கியிருக்கிறார். ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறி வருவதை வைத்து கிண்டலடித்துள்ளனர். இதற்கு நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ரஜினி ரசிகர்கள் கடும் கோபமடைந்துள்ளனர். நடிகர் ஜெயம் ரவியையும் இயக்குநர் ப்ரதீப்பையும் சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்து வருகின்றனர். அவற்றில் சில..

பேட் டேஸ்ட்

கோமாளி டிரைலர்ல ரஜினி அரசியல் பிரவேசம் பற்றிய காட்சி தேவை இல்லாதது. டைரக்டர் வற்புறுத்தி இருந்தாலும் ஜெயம் ரவி அதைத் தவிர்த்திருக்கணும். பேட் டேஸ்ட் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

சினிமாத்துறை

ஏன் சினிமா துறையை சேர்ந்த ஒரு பெரிய ஆள் கூட கோமாளி ட்ரெயிலர் குறித்து விமர்சிக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

குத்துற குத்துல

ரஜினி ஃபேன்ஸ் பவர் என்னனு இந்த கோமாளி டீம்க்கு புரிய வைக்கணும். இந்த படம் குத்துற குத்துல இனி எவனும் இந்த மாதிரி வேலையை பார்க்க கூடாது. இந்த படத்தை தலைவர் ஃபேன்ஸ் மட்டும் பாக்காதீங்க மத்தவனுங்க சப்போர்ட் பண்ணினா பரவா இல்லை என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

ஒரு ஃபேன்

ஜெயம் ரவிக்கு ஒரு ஃபேன் இருக்குறது இப்போதான் தெரிஞ்சுது.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

பிளாப் ஆக்க வேண்டும்

தலைவர் ரசிகர்கள் யாரும் கோமாளி படத்தை பார்க்காதீர்கள். அந்தப் படத்தை பிளாப் ஆக்க வேண்டும் என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

நன்றி கெட்ட உலகம்

கோமாளியை புறக்கணியுங்கள் ரசிகர்களை தவிர வேறு யாரும் கோமாளி படக்குழுவினருக்கு எதிராக குரல் கொடுக்காது அதிர்ச்சியாக உள்ளது. நன்றி கெட்ட உலகம்.. யார் மனமும் காயப்படாத மாதிரி படம் எடுக்க தெரியாத ஜென்மங்கள். ஜெயம் ரவி நீ எல்லாம் ஒரு மனுஷன், சீ உன்னை போய் எப்படி நினைச்சுட்டு இருந்தேன் என்கிறார் இந்த ரசிகர்.

கர்மா ச்சும்மா வச்சு செய்யும்

கோமாளி படத்தோட "இயக்குனர்" பெரிய ஹாலிவுட் டைரக்டர் மாதிரியும், ஜெயம் ரவி பெருசா சாதிச்ச நடிகர் மாதிரியும், பாய்காட் கோமாளின்னு டேக்போட வேண்டிய அவசியமே இல்லை, கர்மா ச்சும்மா வச்சு செய்யும்! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கூட்டமா நினைத்தாலும்

ஒரு கோமாளி தனியாக நினைத்தாலும் கோமாளி கூட்டமாய் சேர்ந்து நினைத்தாலும் இந்த தனி மனித சகாப்தத்தை எவனாலும் எதுவும் செய்ய முடியாது. #நாளைய_தமிழகம்_ரஜினி
#துரோகிகளையும்_நேசிக்கும்_ரஜினி என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X