தர்பார் படத்தை திரையிடாததால் ரஜினி ரசிகர்கள் ரகளை.. பேனர்கள கிழிப்பு.. திண்டுக்கல்லில் களேபரம்!

Recommended Video

Darbar Public Opinion | Darbar Audience Review | Rajini | Nayanthara | Anirudh

திண்டுக்கல்: தர்பார் படம் திரையிடப்படாததால் திண்டுக்கல்லில் ரஜினி ரசிகர்கள் திரையரங்கம் முன்பு இருந்த பேனர்களை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் ரஜினிகாந்தின் 167 வது படமான தர்பார் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தர்பார் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

தமிழகத்தை பொருத்தவரை பெரும்பாலான திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கே சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன. படம் ரிலீஸான தியேட்டர்களில் பட்டாசு, பாலபிஷேகம் என நெட்டிசன்கள் பட்டையை கிளப்பி வருகின்றனர்.

பொங்கல் வைத்த பெண்கள்

பொங்கல் வைத்த பெண்கள்

பாளையங்கோட்டையில் திரையரங்கு வாசலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். படம் வெற்றியடைய வேண்டி பொங்கலிட்ட அவர்கள், பட்டாசுகள் வெடித்தும், ஆடி, பாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ரஜினி ரசிகர்கள் ரகளை

ரஜினி ரசிகர்கள் ரகளை

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ரஜினி ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள ராஜேந்திரா திரையரங்கில் தர்பார் படம் வெளியிடப்படவில்லை என தெரிகிறது.

பேனர்கள் கிழிப்பு

பேனர்கள் கிழிப்பு

இதனால் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்கள் கடுப்பாகினர். இதனை தொடர்ந்து திரையரங்கிற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை அப்புறப்படுத்தினர். ரஜினி ரசிகர்கள் திடீர் ரகளையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X