இந்திய அளவில் ட்ரென்டிங்கில் டாப்.. குதூகலிக்கும் ரசிகப் பெருமக்கள்! #வாழ்நாள்சாதனையாளர்ரஜினி
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்ததை தொடர்ந்து வாழ்நாள் சாதனையாளர் ரஜினி என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரென்ட்டாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்துள்ளது. கோவாவில் நவம்பர் 20 முதல் 28 தேதி வரை சர்வதேச திரைப்பட விழாவின் 50வது ஆண்டின் பொன் விழாவில் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் என பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரஜினி ரசிகர்கள் மத்திய அரசின் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.

ட்ரென்டிங்
இதனை முன்னிட்டு #வாழ்நாள்சாதனையாளர்ரஜினி என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது.
கெத்துடா..
இந்தியாவில் பல மாஸ் நாயகர்கள் வயது காரணமாக மார்க்கெட் இழந்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகனாகவே கம்பீரமாய் மார்க்கெட் இழக்காமல் நிற்கும் அகில இந்திய சூப்பர் ஸ்டார்.. பத்மவிபூஷண் தலைவர் ரஜினிகாந்த்.. கெத்துடா.. என கூறியுள்ளார் இந்த ரசிகர்.
தமிழ் சினிமாவின் ஆளுமை
40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகிறார் ரஜினிகாந்த் என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
வேற லெவல்
நவம்பர் மாசம் நமக்கு நிறைய ட்ரீட் இருக்கு போல, ஏற்கனவே தலைவர் படத்த பத்தின செய்திகள் இருக்கு, இப்ப #வாழ்நாள்சாதனையாளர்ரஜினி
#வாழ்நாள்சாதனையாளர்ரஜினி
கொடுக்கறாங்க, வேற லெவல் தலைவா நீங்கள்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
பெருமை சொன்னதும்
இவர் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்னு சும்மாவா பாட்டு வச்சாங்க.. என்று கேட்கிறார் இவர்.
தமிழ் சினிமா
தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு சென்றவர் தலைவர் என ரஜினியின் புகழை பாடுகிறார் இந்த ரசிகர்.
நிற்காமல் ஓடும் குதிரை
நாற்பது ஆண்டுகளாக நிற்காமல் ஓடும் குதிரை.. என ரஜினியை பாராட்டி கூறுகிறார் இந்த ரசிகர்.
பொருத்தமான வரிகள்
நூறு முகங்கள் மாறி வந்தும்
ஏறு முகத்தில் இருக்கும் வீரன்டா,
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு
உண்மை தானடாஇது வெறும் பாடல் வரிகள் மட்டும் இல்ல
,நிஜத்திலும் தலைவருக்கு மட்டுமே பொருத்தமான வரிகள் என்கிறார் இந்த ரசிகர்.
போட்டின்னு வந்துட்டா
பொதுவாக என் மனசு தங்கம்.. ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்.. என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
ஜெயிக்கிற குதிரை
70 வயசாச்சு ஆனா இவரோட நடிச்சவங்க எல்லாம் ஓய்வெடுக்க போய்ட்டாங்க ஆனால் இன்னும் இந்த குதிரை ஓடிட்டே தான் இருக்கு..அதுவே பெரிய சாதனை தானே.. ஜெயிக்கிற குதிரை.. என்று கூறுகிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











