ரஜினி பற்றி எல்லாம் தெரிந்தும் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு ரஞ்சித் அடம்
சென்னை: ரஜினியின் புகழ் பற்றி தெரிந்தும் பா. ரஞ்சித் ஒரு விஷயத்தில் அடம்பிடித்துள்ளார்.
கபாலி படத்தை அடுத்து பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு படத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளனர். மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை இது.
முன்னதாக ஹாஜி மஸ்தான் கதை என்று கூறப்பட்டதால் அவரின் வளர்ப்பு மகன் ரஜினிக்கு மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை
மும்பை பின்னணி சரி, ஆனால் ரஜினி அங்கு சென்றால் அவரை அனைவருக்கும் அடையாளம் தெரியும். கூட்டம் கூடிவிடும், அவர்களை சமாளிப்பது கடினம். அதனால் செட் போட்டு எடுக்கலாமே என்று ரஞ்சித்திடம் கூறப்பட்டதாம்.

ரஞ்சித்
செட் எல்லாம் வேண்டாம், எனக்கு மும்பைக்கே போய் தான் படம் எடுக்க வேண்டும் என்று ரஞ்சித் அடம்பிடித்தாராம். இதையடுத்து செட் போடும் ஐடியா கைவிடப்பட்டதாம்.

தாராவி
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் தான் ரஜினி படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அது தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடமும் கூட.

ரஜினி
படப்பிடிப்புக்காக ரஞ்சித் மற்றும் படக்குழு நேற்று முன்தினமே மும்பை சென்றுவிட்டதாம். ரஜினி வரும் 28ம் தேதி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அவர் 3 வாரங்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்புவாராம்.


Click it and Unblock the Notifications











