ரஜினி கட்சி தொடங்கப் போகிறார்.. ''விளையாட்டு செய்திகள் நிறைவுபெற்றது''
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதுக்கட்சி துவங்கப் போவதை மக்கள் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என்று கூறிக் கொண்டே இருக்கிறார். இன்னும் வந்தபாடு இல்லை. இந்நிலையில் அவர் வரும் ஜனவரி மாதம் 4ம் தேதி புதுக்கட்சி துவங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர் அரசியலுக்கு வருகிறார் என்பதை நம்ப பலர் தயாராக இல்லை. இந்நிலையில் ரஜினி கட்சி துவங்கும் செய்தியை பார்த்துவிட்டு ஒன்இந்தியா வாசகர்கள் போட்டுள்ள கமெண்ட்டுகள்,

அப்பாவி மக்கள்
இன்னுமா இந்த உலகம் நம்புது..... அப்பாவி மக்கள்... என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

காலண்டர்
கட்சி தொடங்கறதா சொல்லி, நீங்க போட்ட மொத்த தேதியும் ஒரு வருஷ காலெண்டர்ல fit ஆயிரும்.

ஒரு அளவு இருக்கு
சும்மா காமெடி பண்ணிட்டு. நா ஸ்கூலுக்கு போகும் போது சொன்னாப்ல இப்போ என் பையன் ஸ்கூலுக்கு போறான். நானும் ரசிகன்தான் ஆனால் ஒரு அளவு இருக்கு.

கதாநாயகர்கள்
ஆண்டவா.... கதாநாயகர்களிடமிருந்து எங்களை காப்பாற்று.... வில்லன்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

நடிகை
இந்தப் படத்தின் இயக்குனர் யார்? கதை என்ன? நடிக்கவிருக்கும் (குழந்தை) நடிகை யார்?. (ரஜினி தனது மகள் வயது ஹீரோயின்களுடன் நடிப்பதை இப்படி ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.)

ஏமாற்றுகிறார்
அரசியலுக்கு வருவேன்னு 30 வருடமா ஏமாத்திட்டே இருக்கார் இதுக்கு முடிவே கிடையாதா

எந்த வருடம்
ரஜினி வரும் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதாக அறிவிக்கப்பட்டதும் பலரும் கேட்கும் ஒரே கேள்வி, எந்த வருட ஜனவரி ??? என்பது தான்.

விளம்பரம்
தான் நடித்துள்ள 2.0 படம் அடுத்த ஆண்டு ரிலீஸாவதால் அதற்கு விளம்பரம் தேட ரஜினி அரசியல், புதுக் கட்சி என்று கதை விடுவதாக ஒன்இந்தியா வாசகர்கள் கூறுகிறார்கள்.

நட்சத்திரம்
ரஜினி - சமூக தலைமைக்கு தகுதியற்ற ஒரு அழகான நட்சத்திரம்.

விளையாட்டு செய்திகள்
விளையாட்டு செய்திகள் நிறைவுபெற்றது என்று ஒரு வாசகர் கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











