2.0 பிரமாண்ட இசை வெளியீட்டு விழா... ரஜினிகாந்த் இன்று துபாய் பயணம்!
சென்னை: 2.0 படத்தின் பிரமாண்ட இசை விழாவில் கலந்து கொள்ள இன்று துபாய் புறப்படுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
உலகிலேயே ஒரே 7 ஸ்டார் ஓட்டலில் அவரும் எமி ஜாக்சன் உள்ளிட்ட நடிகர்களும் தங்குகிறார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் 2.0. லைகா நிறுவனம் ரூ 400 கோடி செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் உள்ள பர்ஜ் பார்க்கில் வரும் அக்டோபர் 27 வெள்ளிக்கிழமை நடக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் தன் குழுவினருடன் படத்தின் பாடல்களை லைவாக இசைக்கிறார்.
இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலக முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். அக்ஷய் குமார், எமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர் உள்பட பலரும் துபாய்க்குப் போய்விட்டார்கள்.
நாளை படத்தின் நாயகன் ரஜினிகாந்த் விமானம் மூலம் துபாய் செல்கிறார். இந்த நிகழ்ச்சியைக் காண 10000 ரசிகர்கள் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். 12000 ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











