Rajini: சூப்பர் ஸ்டாரை சந்தித்த இர்ஃபான் பதான்... விக்ரமை தொடர்ந்து அடுத்து ரஜினியுடன் கூட்டணியா..?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.

தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

 Rajini: Former cricketer Irfan Pathan met superstar Rajinikanth

தலைவர் 170 படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து மும்பை கிளம்பினார் ரஜினிகாந்த்.

அப்போது அவரை முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டாருடன் இர்பான் பதான்

ஜெயிலர் படத்தின் அசுரத்தனமான வெற்றியால் சூப்பரான கம்பேக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். இதன் தொடர்ச்சியாக பொங்கலுக்கு ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் வெளியாகிறது. இதுதவிர தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கிய தலைவர் 170 படப்பிடிப்பு, தொடர்ந்து கன்னியாகுமரி, நெல்லை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. அதன்பின்னர் சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார், தற்போது மும்பை சென்றுள்ளார். அங்கு 3 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினி வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சி எடுக்கப்படவுள்ளதாம். இது செம்ம மாஸ்ஸாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மும்பை படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து விமானத்தில் பறந்தார் ரஜினிகாந்த். அப்போது அவரை முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமாகி ஆல் ரவுண்டராக மாஸ் காட்டியவர் இர்ஃபான் பதான். இந்திய அணிக்காக பல போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.

அவர், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டிக்காக சென்னை வந்திருந்தார். அதன்பின்னர் அவர் சென்னையில் இருந்து கிளம்பிய போதே சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்துள்ளார். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அதில், "நம் நாட்டின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார், அதேநேரம் மிக எளிமையான மனிதர். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்ற பின்னர் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் இர்ஃபான் பதான். சீயான் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் போலீஸ் ஆபிஸ் கேரக்டரில் நடித்து மாஸ் காட்டியிருந்தார். தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற கனவில் மிதந்து வரும் இர்ஃபான் பதான், சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிப்பாரா என எதிர்பார்க்க வைத்துள்ளது இந்த போட்டோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X