அப்போ அது உறுதியா.. தீயாய் வேலை செய்யும் ரசிகர்கள்.. டச்சிங் கொடுத்த ரஜினி!

Recommended Video

Rajini helping who lost house in Kaja cyclone | தீயாய் வேலை செய்யும் ரஜினி ரசிகர்கள் !

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் தனது ரசிகர்களால் கட்டப்பட்ட 10 வீடுகளுக்கான சாவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று வழங்கினார்.

கடந்த ஆண்டு வங்கக்கடலில் உருவான கஜா புயல் நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதனால் ஏராளமான மக்கள் வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தனர்.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த 10 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வீடுகளை கட்டிகொடுத்துள்ளனர்.

சாவி கொடுத்த ரஜினி

கோடியக்கரை, தலைஞாயிறு உள்ளிட்டப் பகுதிகளில் வீடுகளை கட்டியுள்ளனர். வீட்டின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் வீடுகளை பெறும் 10 குடும்பங்களை சேர்ந்தவர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் அவரது கையால் சாவியை பெற்றுக்கொண்டனர்.

மக்கள் பணியில் கவனம்

மக்கள் பணியில் கவனம்

18.5 லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்கள் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மக்கள் பணியில் கவனம்

மக்கள் பணியில் கவனம்

18.5 லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்கள் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

நில வேம்பு

நில வேம்பு

ஏற்கனவே சென்னை உட்பட பல பகுதிகளில் மழைக்காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர். சென்னை தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்தபோது லாரிகளில் குடிநீர் வழங்கி உதவி புரிந்தனர்.

ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள்

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்துள்ள நிலையில் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் மக்கள் பணிகளை தீயாய் கவனித்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

ஒரே தலைவன்

மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து எப்பொழுதும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே தலைவன் ரஜினி தான் என்று டிவிட்டி வரும் ரஜினி ரசிகர்கள், #மக்கள்_நலனில்_ரஜினி என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X