தீவிர களப்பணி செய்யும் 78 வயது ரசிகை... பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்திய ரஜினி!

தீவிர களப்பணி செய்து வரும் 78 வயது ரசிகைக்கு நடிகர் ரஜினி பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தியுள்ளார்.

சென்னை: வயதையும் பொருட்படுத்தாமல் தீவிரக் களப்பணி செய்து வரும் 78 வயது ரசிகையை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தியுள்ளார் நடிகர் ரஜினி.

சினிமாவில் நடிப்பு ஒருபுறம் இருக்க, அரசியல் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அவ்வப்போது, தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறார். விரைவில் தனது கட்சிப் பெயரை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajini honours 78 years old fan

இந்நிலையில், திருவொற்றியூரைச் சேர்ந்த தீவிர ரஜினி ரசிகையான திருமதி சாந்தா (78), தனது வயதையும் பொருட்படுத்தாமல், ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கை களப்பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இவரது ஒரே விருப்பம், தனது தலைவர் ரஜினியை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்பது தான். இந்தத் தகவலை ரஜினி மக்கள் மன்றத்தினர் ரஜினியிடம் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து சாந்தாவை இன்று தன் இல்லத்துக்கு வரவழைத்த ரஜினி, அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார். மேலும் அப்போது, வயதையும் பொருட்படுத்தாமல் களப்பணி ஆற்றி வரும் சாந்தாவிற்கு அவர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X