சத்யஜோதி தியாகராஜன் மகன் திருமணத்தில் கமல்... வரவேற்பில் ரஜினி வாழ்த்து!
சென்னை: பிரபல தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனின் மகன் செந்தில் - தர்ஷா திருமண வரவேற்பில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
முன்னதாக காலையில் நடந்த திருமணத்தின்போது நடிகர் கமல்ஹாஸன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
கமலுக்கு தேசி விருது பெற்றுத் தந்த மூன்றாம் பிறை, பகல் நிலவு, பார்த்திபன் கனவு போன்ற படங்களைத் தயாரித்தவர் சத்யஜோதி தியாகராஜன். முன்னாள் அமைச்சர் ஆர் எம் வீரப்பனின் மருமகன்.

கமல்
இவரது மகன் செந்தில் - தர்ஷா திருமண வரவேற்பு சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாஸன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், பாரதிராஜா, மணிரத்னம், சாருஹாஸன், வெங்கட்பிரபு ஆகியோர் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

ரஜினி
இந்த திருமண வரவேற்புக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் வந்து வாழ்த்தினார்.

இளையராஜா
இசைஞானி இளையராஜா, இயக்குநர் கே பாலச்சந்தர், மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன், இயக்குநர் ஷங்கர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஆர் எம் வீ
முன்னாள் அமைச்சரும் எம்ஜிஆர் கழகத் தலைவருமான ஆர்எம் வீரப்பன் நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்.


Click it and Unblock the Notifications











