ரஜினியால் அல்லோகலப்பட்ட அப்பல்லோ.. ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்களால் பரபரப்பு.. எல்லாம் பாசம் சார்!

பெங்களூரு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரரை பார்க்க சென்ற ரஜினியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

Watch Video : Rajini Visited Bengaluru Hospital to see Satyanarayana Rao

பெங்களூரு: பெங்களூரு அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்தை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் ரஜினியின் மூத்த சகோதரர் சத்யநாராயணா பெங்களூருவில் வசித்து வருகிறார். 77 வயதாகும் அவர் கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிசிக்சை நடைபெற்றது.

Rajini in Bengaluru apollo hospital; fans thronged

தனது சகோதரரை பார்ப்பதற்காக ரஜினி நேற்று பெங்களூரு அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அவரது வருகை குறித்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் ரகசியமாக தான் வைத்திருந்தது. ஆனால் ரஜினி மருத்துவமனைக்கு வந்ததும், அந்த தகவல் தீயாக பரவியது.

தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் மருத்துவமனையில் குவியத் தொடங்கினர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மருத்துவமனையை சூழ்ந்துகொண்டதால் அங்கு பரபரப்பு உருவானது. சில ரசிகர்கள் ரஜினியின் கையைப் பிடித்து அழுதனர். பலர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர்.

Rajini in Bengaluru apollo hospital; fans thronged

சிறிது நேரம் மருத்துவமனையில் இருந்த ரஜினி, கூட்டம் அதிகரிப்பதை கண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். ரஜினி புறப்பட்டு சென்றதையடுத்து கூட்டம் கலைந்து சென்றது.

ரஜினியின் சகோதரர் சத்யநாரயணா உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து அவர் தற்போது நடக்க ஆரம்பித்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Rajini in Bengaluru apollo hospital; fans thronged

ரஜினி தன் சகோதரர் மீது இருந்த பாசத்தால் அவரை நேரில் சந்திக்க சென்றார். ரஜினி மீது வைத்திருக்கும் பாசத்தால் அவரை நேரில் சந்திக்க ரசிகர்கள் அங்கு கூடி விட்டனர். இதனால் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X