லிங்கா படத்தின் மோசமான தோல்விக்கு ரஜினி காரணமா? என்னங்க இப்படி சொல்லிட்டாரு கே.எஸ்.ரவிகுமார்

சென்னை: கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான 'லிங்கா' திரைப்படம் மோசமான தோல்வியை சந்திக்க ரஜினியே காரணம் என கே.எஸ். ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

தான் முடிவுசெய்து வைத்திருந்த கதையில் ரஜினி செய்த மாற்றம் எங்களுக்கு பிடிக்கவில்லை எனவும் கே.எஸ். ரவிகுமார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிக்காக சூப்பரான க்ளைமேக்ஸ் காட்சியை தான் யோசித்து வைத்திருந்ததாகவும் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் தெரித்துள்ளார்.

படையப்பா படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, கே.எஸ். ரவிகுமார், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக 'லிங்கா' படத்தில் இணைந்தது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு 2014 டிசம்பர் 12ம் தேதி வெளியான இத்திரைப்படம் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. கண்ணீர் விட்டு கதறும் அளவிற்கு படத்தின் மேக்கிங் மோசமாக இருந்ததாக ரசிகர்கள் வேதனை தெரிவித்திருந்தனர்.

ரஜினி கதையவே மாத்திட்டார்

ரஜினி கதையவே மாத்திட்டார்

கே.எஸ். ரவிகுமார் ரஜினியோட ஆஸ்தான இயக்குநராக இருந்ததால், முத்து, படையப்பா மாதிரி லிங்காவும் ஹிட் கொடுக்கும்ன்னு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் தோல்வியால் ரஜினி ரசிகர்கள் கே.எஸ். ரவிகுமாரை மிகக் கடுமையாக அப்போது விமர்சித்திருந்தனர். இந்த நிலையில், லிங்காவின் தோல்விக்கான காரணம் ரஜினி தான் என்றும், அவர் தனது கதையை மாத்திவிட்டதாகவும் கே.எஸ். ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

க்ளைமேக்ஸே வேற

க்ளைமேக்ஸே வேற

சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலின் உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ். ரவிகுமார் இப்படி அதிரடியான சரவெடிய கொளுத்திப் போட்டுள்ளது, ரஜினி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "லிங்கா படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை வேறுவிதமாக எடுக்க நினைத்ததாகவும், அதில் பலூன் ஃபைட் கிடையாது என்றும் கூறியுள்ளார்.

கேப்ல வச்ச ஆப்பு

கேப்ல வச்ச ஆப்பு

ஹைதராபத்தில் 'லிங்கா' ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த போது, நடுவில் சின்ன கேப் கிடைத்த ரஜினி, கே.எஸ். ரவிகுமாரிடம் அதுவரை எடுத்த காட்சிகளை போட்டுக் காட்ட சொல்லியதாகத் தெரிகிறது. அப்போது ரஜினி தனக்கு விரும்பிய காட்சிகளை வைக்குமாறு கே.எஸ். ரவிகுமாரை வலியுறுத்தியதாகவும், அவரும் படத்தை உடனே ரிலீஸ் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் ரஜினி சொன்னதை அப்படியே படத்தில் வைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

யாருக்குமே பிடிக்கல

யாருக்குமே பிடிக்கல

ரஜினி சொன்ன மாற்றங்கள் தான் உட்பட தன்னோட உதவி இயக்குநர்கள் யாருக்குமே புடிக்கவில்லை, இதுதான் லிங்காவின் தோல்விக்கு முக்கியமான காரணம் என கே.எஸ். ரவிகுமார் தெரிவித்துள்ளார். ரஜினியின் பிறந்தநாள் தினத்தில் படத்தை கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்ற வேகத்தில், திருப்தியில்லை என்று தெரிந்தும் லிங்காவை ரிலீஸ் செய்ததாக அவர் அந்த உரையாடலில் கூறியுள்ளார். இந்தமாதிரி நேரத்துல இயக்குநர் சங்கர் சரியான முடிவெடுப்பார் எனவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X