முக அழகிரி, ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு!

தனது இளையமகள் சௌந்தர்யாவின் திருமண அழைப்பிதழை அவர்களுக்கு வழங்கி, திருமணத்துக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், சென்னையில் கட்டுமான தொழில் செய்யும் அஸ்வின் ராம்குமாருக்கும் செப்டம்பர் 3-ந்தேதி திருமணம் நடக்கிறது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை, ராஜா முத்தையா மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.
சௌந்தர்யா திருமணத்திற்காக மூன்று விதங்களில் தயாராகியுள்ள அழைப்பிதழ்கள் கொடுக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
சௌந்தர்யா ரஜினி திருமணத்தில் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரையுலகினர் பெருமளவில் வருகிறார்கள்.
முக்கியமானவர்களுக்கு ரஜினியும் அவர் மனைவி லதாவும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்துவருகிறார்.
நேற்று முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரை நேரில் சந்தித்து திருமணம் அழைப்பிதழ் கொடுத்தார், ரஜினி.
இன்று மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











