தலைவர் 170ல் பவர்ஃபுல்லாக வரும் ரஜினி... ஜெய்பீம் மாதிரி வெயிட்டான ஸ்டோரி... ஃபர்ஸ்ட் லுக் ரெடி!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி லைன்அப்பில் 3 படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன.
ஏற்கனவே நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இதனைத் தொடர்ந்து லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார்.
இன்னொரு பக்கம் தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தின் அப்டேட்டும் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.
இந்நிலையில், தலைவர் 170 படத்தின் கதை, ரஜினியின் கேரக்டர் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

வேகமெடுக்கும் தலைவர் 170
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியதாக தெரிகிறது. இதனால் விரைவில் ஜெயிலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் ரஜினியின் தலைவர் 170 படத்தின் அப்டேட் அமர்க்களமாக வெளியானது.

இதுவும் உண்மைச் சம்பவம் தான்
சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி, பிரதீப் ரங்கநாதன் என பல இயக்குநர்கள் பெயர் அடிப்பட்டு வந்தது. ஆனால், ஜெய்பீம் இயக்குநர் தசெ ஞானவேல் சைலண்டாக தலைவர் 170ல் இணைந்துள்ளார். இந்தப் படம் ஜெய்பீம் மாதிரியே உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினியின் கேரக்டர் இதுதான்
தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு உண்மைச் சம்பவம் குறித்த கதையை பின்னணியாக வைத்து இந்தப் படத்தை இயக்குகிறாராம் தசெ ஞானவேல். முக்கியமாக இதில் ரஜினி ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தூக்குத் தண்டனைக்கு எதிரான மையக் கருத்து தான் தலைவர் 170 கதையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

விரைவில் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக்
ரஜினி முஸ்லிம் பெயர் கொண்ட கேரக்டரில் ரொம்பவே பவர்ஃபுல்லாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாட்ஷா படத்திற்கு பிறகு ரஜினியின் கேரக்டர் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெறும் என படக்குழு உறுதியாக நம்புகிறதாம். ரஜினியுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் லிஸ்ட்டுடன் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் போஸ்டர்களும் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
தலைவர் 170 திரைப்படம் ரஜினிக்கு செம்ம மாஸ் ஹிட் கொடுக்கும் என்பதால் அவரது ரசிகர்கள் அதீத உற்சாகத்தில் உள்ளனர். அடுத்த ஆண்டிலேயே தலைவர் 170 ரிலீஸாக உள்ளதால் ஜெயிலர், லால் சலாம், தலைவர் 170 என வரிசையாக ரஜினியின் ட்ரீட் தெறிக்கவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











