லைகா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 2 படங்கள்..பிரபல இயக்குநர் கதை, இதுதான் கேரக்டரா?..சுவாரஸ்ய தகவல்

நடிகர் ரஜினிகாந்த் லைக்கா நிறுவனத்துடன் இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தை இயக்குநர் மணிரத்தினம் இயக்குவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ள நிலையில் நவம்பர் 5ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

இயக்குநர் மணிரத்தினம் இதற்கான கதையையும் உருவாக்கி விட்டார் பழைய இந்தி படத்தின் தழுவலாக இந்த கதை இருக்கும். மிகவும் வித்தியாசமான கதைக்களமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 லைக்காவும், மணிரத்னமும், ரஜினியும்- பிரம்மாண்டங்களின் இணைப்பு

லைக்காவும், மணிரத்னமும், ரஜினியும்- பிரம்மாண்டங்களின் இணைப்பு

லைக்கா நிறுவனத்திற்கும் நடிகர் ரஜினிகாந்திற்கும் இடையே இருக்கும் தொடர்பு மிகப்பெரியது. மிகப்பெரிய பிரேக் படங்களை லைக்கா நிறுவனம் மூலம் ரஜினிகாந்த் கொடுத்துள்ளார். அதேபோல் இயக்குநர் மணிரத்தினத்திற்கும் ரஜினிக்கும் உள்ள தொடர்பும் அவர்கள் இருவரும் இணைந்து கொடுத்த படமும் கோலிவுட்டில் மிகப் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்றாகும். தளபதி படத்தில் நடிகர் ரஜினிகாந்த்-மம்மூட்டி இணைந்து நடித்திருப்பர். இந்த படம் ரஜினி வாழ்க்கையில் அவருடைய திரைப்பட வாழ்க்கையில் சிறந்த படங்களில் ஒன்று என்று இன்றும் பேசப்படுகிறது.

 ரஜினி-மணிரத்னம் போட்ட செல்லச்சண்டை

ரஜினி-மணிரத்னம் போட்ட செல்லச்சண்டை

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் தனக்கொரு சிறிய வேடமாவது வேண்டும் என்று கேட்டபோது கொடுக்க முடியாது என்று மணிரத்தினம் மறுத்ததாக செல்லமான கோபத்துடன் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். ஆனால் அது உண்மையும் கூட. அவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகும் படத்தில் நடிக்க அதிலும் பொன்னியின் செல்வன் கதையை அக்குவேறு ஆணிவேறாக விரும்பி படித்துள்ள ரஜினி அதில் ஒரு கேரக்டராக நடிக்க கேட்டிருப்பார் என்பது நிஜம், ஆனால் அந்த வேடத்தை கொடுத்தால் ரசிகர்கள் தம்மை வறுத்தெடுத்து விடுவார்கள் என்று தான் மறுத்ததாக மணிரத்தினம் கூறியதிலும் உண்மை இருக்கும். இவர்கள் செல்ல சண்டையில் ஒரு உண்மை மெல்லியதாக இழையோடுவதை நாம் காண முடிந்தது.

 பொன்னியின் செல்வன் படம் மூலம் விஸ்வரூபம் எடுத்த மணிரத்னம்

பொன்னியின் செல்வன் படம் மூலம் விஸ்வரூபம் எடுத்த மணிரத்னம்

பொன்னியின் செல்வன் மூலம் ரஜினியின் படங்களையே பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் முந்திய இயக்குநர் மணிரத்தினம் இந்த ஆண்டின் வெற்றிகரமான இயக்குநராக மீண்டும் அவதாரம் எடுத்துள்ளார். ரஜினி விரும்பிய பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க முடியாவிட்டாலும் இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற அவரது விருப்பம் லைக்கா நிறுவனம் மூலம் நிறைவேறப்பட உள்ளதாக தெரிகிறது. லைகா நிறுவனம் அடுத்து தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினி நடிக்க ஒப்பந்தத்தை போட்டு நவ.5 அன்று அறிவிக்கப்பட போவதாக தகவல் வெளியானது. இயக்குநர், கதை மற்றும் நடிகர்கள் பற்றி பின்னர் முடிவு செய்வார்கள் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் இதில் ஒரு படத்தை இயக்குநர் மணிரத்தினம் இயக்க உள்ளார் என்ற தகவலை சினிமா வட்டாரங்களில் உலா வருகிறது.

 ரஜினியின் விருப்பம், நிறைவேற்றும் லைக்கா

ரஜினியின் விருப்பம், நிறைவேற்றும் லைக்கா

இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் தான் நடிக்க வேண்டும் என்கிற விருப்பத்தை ரஜினி லைக்கா நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் ஒருவரே தனக்கான சரியான கதையை வைத்து இயக்க முடியும், சண்டை காட்சிகள் குறைவாக இருந்தாலும் தனக்கான கேரக்டரை வலுவாக அவரால் கொடுக்க முடியும் என்று ரஜினி லைகா பட தயாரிப்பு ஆட்களிடம் தெரிவித்து இயக்குநர் மணிரத்தினத்தை ஒரு படம் இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்தினமும் அதற்கு ஒப்புதல் அளித்ததாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதில் இயக்குநர் மணிரத்தினம் ரஜினிக்கான ஒரு வலுவான கதையையும் தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

 பேரனை வளர்த்து உருவாக்கும் பாத்திரத்தில் இயல்பான வேடத்தில் ரஜினி?

பேரனை வளர்த்து உருவாக்கும் பாத்திரத்தில் இயல்பான வேடத்தில் ரஜினி?

இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் போல் தனது வயதுக்குரிய பாத்திரத்துடன் ரஜினி நடிப்பார், ரஜினியே பிரதான பாத்திரமாக இருப்பார். இதில் ரஜினியின் பேரனாக ஒரு புது நடிகர் அல்லது ஒரு இளம் முன்னணி நடிகர் நடிக்க உள்ளதாக தெரிகிறது. தாத்தா பேரன் சம்பந்தப்பட்ட ஒரு உணர்ச்சிமிகு கதை, அதில் ரஜினிகாந்துக்கே உரிய ஆக்ஷன் அம்சங்கள் உள்ளிட்ட மற்றவைகளும் இருக்கும். இவைகள் கலந்து கலவையாக கதையை இயக்குநர் மணிரத்னம் தயார் செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தக்கதை பாலிவுட் பிரபல நடிகர் பிரித்விராஜ் கபூர் அவரது மகன் ராஜ்கபூர், பேரன் ரந்தீர் கபூர் இணைந்து நடித்த ஒரு பிரபலமான படத்தின் கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பேரனை ட்யூன் செய்து உருவாக்கும் ஒரு தாத்தாவின் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

 30 ஆண்டுகளுக்கு பின் இணையும் ரஜினி-மணிரத்னம் ரசிகர்களுக்கு செம விருந்து

30 ஆண்டுகளுக்கு பின் இணையும் ரஜினி-மணிரத்னம் ரசிகர்களுக்கு செம விருந்து

எது எப்படி இருந்தாலும் இயக்குநர் மணிரத்தினமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் 30 வருடங்களுக்கு பிறகு இணைவதால் ரசிகர்களுக்கு மிகுந்த கொண்டாட்டமான ஒரு படமாக அமையும். இயக்குநருடைய எதார்த்தமான இயக்கமும், ரஜினிகாந்தின் துள்ளல் நடிப்பு இணையும் பொழுது உண்மையிலேயே ரஜினி ரசிகர்களுக்கு அது ஒரு சிறப்பான விருந்தாக அமையும் என்று தெரிகிறது. அதே நேரம் ரஜினிகாந்தின் இரண்டாவது படத்திற்கான இயக்குநர் சம்பந்தமாக ஒரு புதுமுக இளம் இயக்குநர் இயக்குவார் என்று தெரிகிறது.

 லைகா ரஜினி இணைப்பு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

லைகா ரஜினி இணைப்பு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

அது தற்போது உள்ள ட்ரெண்டுக்கேற்றார்போல் கதையாக அமையும் என்று தெரிகிறது எது எப்படி இருந்தாலும் லைக்கா நிறுவனம் படம் தயாரிக்கிறது என்றால், அதில் ரசிகர்களுக்கு தேவையான அம்சங்களை கொடுக்க எந்த அளவிற்கும் செலவு செய்ய தயங்க மாட்டார்கள் என்பதால் ரஜினிகாந்தின் அடுத்த இரண்டு படங்கள் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல அவரை விரும்பும் தமிழக மக்களுக்கும் சிறந்த என்டர்டெயின்மென்ட் பிக்சராக இருக்கும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X